வாழைப்பழம் சாப்பிடுவதால் ஜீரணம் சம்மந்தமான பிரச்னைகள் வராது. உடலுக்கு சக்தி கொடுக்கும், எலும்புகளுக்கு நல்லது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இதய சம்மந்தமான பிரச்னைகளை போக்கும். இத்தகைய பயன்களை கொண்ட வாழைப்பழத்தை வைத்து சிம்பிளாக ஒரு ரெசிபி செய்யலாம் வாங்க.
தேவையான பொருள்:
வாழைப்பழம்-2
நாட்டு சக்கரை-1கப்.
ஏலக்காய்-2
தேங்காய்-1கப்
கோதுமை மாவு-1கப்.
அரிசி மாவு-1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு.
பேக்கிங் சோடா-1 சிட்டிகை.
செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் வாழைப்பழம் 2, நாட்டு சக்கரை 1 கப், ஏலக்காய் 2, தேங்காய் 1 கப் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். அத்துடன் கோதுமை மாவு 1 கப், அரிசி மாவு ½ கப், பேக்கிங் சோடா 1 சிட்டிகை, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி போண்டா பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வாழைப்பழ போண்டா தயார். நீங்களும் வீட்டிலே செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.
இஞ்சி புளி சட்னி
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-3
இஞ்சி-1 துண்டு.
பூண்டு-5
புளி- சிறிதளவு.
நாட்டு சக்கரை-2 தேக்கரண்டி.
உப்பு- சிறிதளவு.
பெருங்காய தூள்- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு ஃபேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, புளி சிறிதளவு, பூண்டு 5 ஆகியவற்றை நன்றாக வதக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அத்துடன் பெருங்காய தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, நாட்டுசக்கரை 2 தேக்கரண்டி சேர்த்து அரைத்தால் சுவையான இஞ்சி புளி சட்னி தயார். வாழைப்பழ போண்டா வித் இஞ்சி புளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமாயிருக்கும். நீங்களும் வீட்டிலே ஒருமுறை செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.