வாழைப்பூ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறும், மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும், இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும். இத்தகைய பலன்களை உடைய வாழைப்பூவை வைத்து சாதம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
வாழைப்பூ பொடி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பொடிக்கு,
கடலைப்பருப்பு-1கப்.
உளுத்தம் பருப்பு-1 கப்.
பூண்டு-10
காய்ந்த மிளகாய்-15
பொட்டுக்கடலை-1/2 கப்.
கருவேப்பிலை- தேவையான அளவு.
பெருங்காயம்-1 தேக்கரண்டி.
கடுகு- 1தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-3
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
வாழைப்பூ-1கப்
மஞ்சள் தூள்- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
முந்திரி-10
வடித்த சாதம்-2 கப்.
வாழைப்பூ பொடி சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு 1 கப்பை நன்றாக கோல்டன் பிரவுனாக ரோஸ்ட் பண்ணி எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது உளுத்தம் பருப்பு 1கப், பூண்டு 10 பல், காஞ்ச மிளகாய் 5, பொட்டுக்கடலை ½ கப், கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் 1 தேக்கரண்டி சேர்த்து இவற்றையெல்லாம் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, காஞ்ச மிளகாய் 3, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி விட்டு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2 போட்டு நன்றாக வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூ 1கப் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சமாக மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக வடித்து ஆறவைத்த சாதம் 2 கப் சேர்த்து வறுத்து வைத்த முந்திரி 10 ஐ இத்துடன் சேர்த்து கடைசியாக அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ பொடி சாதம் தயார். நீங்களும் வீட்டிலே செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
ஆலு பிந்தி சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
சீரகம்-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
பூண்டு-5
வெங்காயம்-1
உருளை-1
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
தனியா தூள்-1 தேக்கரண்டி.
வெண்டைக்காய்-1 கப்.
தக்காளி-1
ஜீரகப்பொடி-1/2 தேக்கரண்டி.
நெய்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
ஆலு பிந்தி சுக்கா செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து அத்துடன் சீரகம் 1 தேக்கரண்டி, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, சிறிதாக நறுக்கிய பூண்டு 5, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் 1, சிறிய துண்டாக நறுக்கிய உருளை 1 சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து அத்துடன் வெண்டைக்காய் 1 கப் சேர்த்து நன்றாக கிண்டவும். வெண்டைக்காயை வேக வைக்க கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து கிண்டி மூடி போட்டு வேகவிடவும். கடைசியாக ½ தேக்கரண்டி ஜீரகப்பொடி, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கொத்தமல்லி சிறிது தூவி இறக்கினால் டேஸ்டியான ஆலு பிந்தி சுக்கா தயார். நீங்களும் இதை வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.