சீம்பால் இல்லாமலேயே பால் கடம்பு செய்யலாமே! 

Kadambu
Kadambu
Published on

தெருவோரக் கடைகளில் அடிக்கடி நம்மை கவரும் சுவையான சிற்றுண்டிகளில் ஒன்றுதான் பால் கடம்பு. குறிப்பாக சீம்பால் என்ற பெயரில் விற்கப்படும் இந்த இனிப்பு, அதன் மென்மையான தன்மை மற்றும் இனிப்பு சுவையால் அனைவரையும் கவர்ந்து விடும். வீட்டில் தயாரிக்கும் போது, நாம் நமக்கு பிடித்தபடி இனிப்பு மற்றும் பிற சுவைகளை சேர்த்து தனித்துவமான பால் கடம்பை உருவாக்கலாம். இந்தப் பதிவில், ரோட்டுக் கடையில் கிடைக்கும் பால் கடம்பை வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையை விரிவாகப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பால் - ½ லிட்டர் (முடிந்த வரை தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால்)

  • சர்க்கரை - 100 கிராம்

  • பால் பவுடர் - 100 கிராம்

  • ஏலக்காய் - 2 அல்லது ½ டீஸ்பூன் (பொடித்தது)

  • சீனா க்ராஸ் (அகர் அகர்) - 7 கிராம்

  • நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

  1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி முழு வேகத்தில் கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

  2. பால் கொதித்ததும் அதனுடன் சர்க்கரை மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  3. பின்னர் பால் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைய விடவும்.

  4. பால் பவுடர் நன்றாக கரைந்ததும் சீனா க்ராஸை பொடி செய்து அல்லது உடைத்து பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். அடிப்பகுதியில் கட்டிகள் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

  5. பால் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து கொண்டே இருக்கவும். பால் பொங்கி வரும் தன்மை கொண்டிருப்பதால் கவனமாக இருக்கவும்.

  6. சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு தட்டு அல்லது அகலமான பாத்திரத்தில் நெய் தடவி கொள்ளவும். பின்னர் காய்ச்சிய பாலின் கலவையை இந்த பாத்திரத்தில் மாற்றி குறைந்தது 4-5 மணி நேரம் ஆற வைக்கவும்.

  7. நன்றாக ஆறிய பிறகு விளிம்புகளில் கத்தியால் கீறி பாத்திரத்தை தலை கீழாக கவிழ்த்து தட்டினால் அப்படியே வேறு பாத்திரத்திற்கு மாறிவிடும். பின்னர் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் வித் கோவக்காய் பொரியல் செய்யலாமா?
Kadambu

வீட்டிலேயே தயாரிக்கும் பால் கடம்பு, ரோட்டுக் கடையில் கிடைக்கும் பால் கடம்பை விட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், நாம் நமக்கு பிடித்தபடி பொருட்களை சேர்த்து தனித்துவமான சுவையை உருவாக்கலாம். இந்த எளிய செய்முறையை பின்பற்றி நீங்களும் வீட்டிலேயே சுவையான பால் கடம்பை தயாரித்து உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்ணுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com