அரிசி மாவு சப்பாத்தி, சுவையான பன்னீர் மஞ்சூரியன் செய்யலாம் வாங்க!

delicious Paneer Manchurian!
healhy recipesImage credit - youtube.com
Published on

பொதுவாக சப்பாத்தி கோதுமை மாவை பயன்படுத்தி செய்வதுதான் வழக்கம். ஆனால் அரிசி மாவிலும் சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும். எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.

அரிசி மாவு சப்பாத்தி:

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு-  1 கப்

சீரகம்- 1/2 ஸ்பூன் 

இஞ்சி- சிறிதளவு

பச்சை மிளகாய் -1

எண்ணெய்- தேவையான அளவு 

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் சேர்த்து விழுதாக அழைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைத்த  விழுதை கொட்டி பச்சை வாசனை போனவுடன் அதனோடு 1 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு  சேர்க்கவும். தண்ணீர் நன்கு  கொதித்தவுடன் மிதமான சூட்டில் அரிசி மாவை  சேர்த்து நன்றாக கிளறி விடவும். மாவு கெட்டி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டில் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி பதத்திற்கு மெலிதாக தேய்த்து தோசை கல்லில் போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான அரிசிமாவு சப்பாத்தி ரெடி!

பன்னீர் மஞ்சூரியன்:

தேவையான பொருள்கள்:

பன்னீர்- 200 கிராம் 

 சோள மாவு-3 டேபிள் ஸ்பூன் 

 மைதா மாவு-3 டேபிள்ஸ்பூன் 

 மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன் 

 மிளகுத்தூள் -1 டேபிள் ஸ்பூன்

 பெரிய வெங்காயம்-2

 குடைமிளகாய் -1

 சோயா சாஸ் -2 டேபிள்ஸ்பூன் 

 சில்லி சாஸ்-2 டேபிள்ஸ்பூன் 

 தக்காளி சாஸ்-2 டேபிள்ஸ்பூன் 

 நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு -1      டேபிள்ஸ்பூன் 

 எண்ணெய்- தேவையான அளவு

 உப்பு -தேவையான அளவு 

செய்முறை:

முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, மிளகாய் தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது அளவு தண்ணீர்விட்டு நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். வெட்டி வைத்த பன்னீர் துண்டுகளை இந்த மாவில் போட்டு நன்கு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
சுவையான குஜராத்தி பிண்டா பட்டடா சப்ஜி செய்து அசத்தலாம் வாங்க!!
delicious Paneer Manchurian!

பின்பு ஒரு  வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நன்கு சூடானவுடன் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் அதனோடு நறுக்கிய வெங்காயம்,  குடைமிளகாய் சேர்த்து  நன்கு வதக்கவும். பின் அதனோடு சோயா சாஸ், தக்காளி சாஸ்,சில்லி சாஸ் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் சோளமாவை எடுத்து 1/4  கப் தண்ணீரில் நன்கு கரைத்து  அதில் ஊற்றவும். கலவை நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாக வரும்போது பொரித்து வைத்த பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகள் அல்லது வெங்காயத்தாள்களை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி!

இந்த பன்னீர் மஞ்சூரியன் ரெசிபி  வெரைட்டி ரைஸ், தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஸ்! ட்ரை பண்ணி பாருங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com