
பார்லியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றன. மேலும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பார்லி மாவில் கஞ்சியோ அல்லது வேறு எதாவதோ செய்து காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிறு நிறைவாக இருக்கும்.
பார்லி மாவில் ஊத்தப்பம் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். ரொம்ப ஈஸிங்க... டிபன் சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னால் மாவை கரைத்து கொண்டால் போதும்.
பார்லி மாவு ஊத்தப்பம் செய்முறை:
ஒரு கப் பார்லி மாவோடு கால் கப் மைதா அல்லது கோதுமை மாவு மற்றும் கால் கப் ரவையை சேர்த்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய், வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி மாவை கலந்து கொள்ளவும். மாவை மிகவும் தண்ணீராக கலக்காதீர்கள். கொஞ்சம் கெட்டியாக ஊத்தப்பம் செய்யும் பதத்திற்கு இருக்க வேண்டும். கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலையை தாளித்து இத்துடன் கலக்கவும்.
அடுப்பில் non stick pan அல்லது அடி கனமான வாணலியை வைத்து காய்ந்த பிறகு முதலில் சிறிது எண்ணெய்யை ஊற்றி பரப்பவும். பிறகு கரண்டியால் மாவை சிறிய அளவில் வட்டமாக ஊற்றவும். சுற்றிவர எண்ணெய்யை ஊற்றி வாணலி அல்லது panஐ மூடி வைக்கவும். ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பிவிடவும்.
மறுபடியும் சிறிது எண்ணெய்யை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான பார்லி ஊத்தப்பம் ரெடி. காலை சிற்றுண்டிக்கு அருமையாக இருக்கும். பார்லி சாப்பிட விரும்பாதவர்கள் கூட இவ்வாறு செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
குந்துரு (கோவைக்காய்) fry மசாலா ரெசிபி
நாம் எப்போதுமே கோவைக்காயில் சாதரணமாக வதக்கல் செய்து சாதத்திற்கு தொட்டு கொள்வோம். மாறாக இந்த ரெசிபியை செய்தீர்களேயானால் சப்பாத்தி, பரோட்டா முதலிய உணவுகளுக்கு side dish ஆக தொட்டு கொள்ளலாம். வெறும் சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
குந்துரு fry மசாலா செய்முறை:
முதலில் 250g குந்துருவை அலம்பி அதை நான்கு துண்டுகளாக கீறிக் கொள்ளவும். காயை நான்கு துண்டுகளாக கட் பண்ண வேண்டாம். காய் முழுவதுமாக இருக்க வேண்டும். எப்படி எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கு கீறி நறுக்குவோமோ அதைப் போல இதையும் நான்கு கீறல்களாக போட்டு கொள்ளவும். Stuffing masala செய்யும் போது காயை எப்படி கீறுவோமோ அதைப் போல் இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு இந்த கீறிய முழு குந்துரு காய்களை போடவும். காய்க்கு தேவையான உப்பை போட்டு கிளறி மூடி வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். உடையாமல் பார்த்து கொள்ளவும். நன்றாக பொன்னிறமாக வந்து பிறகு அடுப்பை அணைத்து காயை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்கவும் (250g காய்ககு ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் மற்றும் ஒரு மீடியம் சைஸ் தக்காளி) சிறிதளவு வதக்கிய பிறகு ½ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், ½ சீரகத் தூள், ½ ஸ்பூன் கரம் மசாலாத் தூள் மற்றும் இந்த மசாலாவிறகுத் தேவையான உப்பை மட்டும் சேர்த்து வதக்கவும்.
பாதி தக்காளி வதங்கிய பிறகு கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும். தக்காளி வெங்காய கலவை நனறாக வெந்த பிறகு fry பண்ணி வைத்துள்ள குந்துரு காய்களை போட்டு நிதானமாக கலக்கவும். ஒரு ஐந்து நிமிடத்திற்கு மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும் (உங்களுக்கு சிறிது தண்ணீர் பதத்தில் வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்). ஐந்து நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி மேலே தூவவும். சுவையான குந்துரு fry மசாலா ரெடி. முயற்சி செய்து பாருங்கள்.