மாலை நேர ஸ்நாக்ஸ்: சூப்பரான இராமேஸ்வரம் பன் மஸ்கா!

வெறும் 15 நிமிடங்களில் சுவையான இராமேஸ்வரம் பன் மஸ்கா தயாரிப்பது எப்படி?
பன் மஸ்கா
பன் மஸ்காAI image
Updated on

ராமேஸ்வரம் பன் மஸ்கா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனி இனிப்பு. பன், வெண்ணெய், பசும்பால், பாதாம் பவுடர், பிஸ்தா, சர்க்கரை சேர்த்து வீட்டிலேயே சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் செய்யலாம். வெண்ணெய், பசும்பால், கருப்பட்டி போன்றவை உடலுக்கு ஆற்றல், எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, சரும பளபளப்பு ஆகிய நன்மைகளை தருகின்றன.

வாழ்க்கையில் என்னதான் மூன்று வேலை உணவு உண்டாலும் நொறுக்கு தீனி வகைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி விருப்பம். அப்படிப்பட்ட நொறுக்கு தீனி வகைகளைக் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது மிகுந்த ஆரோக்கியம் மற்றும் சுத்தமானதாக இருக்கும்.

அன்றாட விசேஷங்களில் செய்யும் இனிப்புகளை காட்டிலும் இந்த இராமேஸ்வரம் பன் மஸ்கா மிக மிகவும் சுவையுடையதாக இருக்கும். வெண்ணெய் மற்றும் பன்னின் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு உடனடியான ஆற்றலைத் தரக்கூடியது.

மேலும் வெண்ணெய் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளவும், மிருதுவாக வைத்துக்கொள்ளவும் இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது.

இதில் லாரிக் அமிலம் உள்ளதால் பாக்டீரியல் மற்றும் தொற்று நோய்களின் இருந்து தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்ணெய்யில் அதிகளவு நிறைந்துள்ள வைட்டமின்ஸ் கண்பார்வையை மேம்படுத்தவும் கண் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கவும் மிகவும் உதவுகிறது.

பன் மஸ்கா
பன் மஸ்காAI image

இதில் அதிக அளவு கொழுப்புகள் உள்ளதால் தசைகளின் வளர்ச்சியைத் தூண்டி உடல் எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது. வெண்ணெய்யில் கால்சியம் பாஸ்பரஸ் நிறைந்து இருப்பதால் எலும்புகளை வலுவாக்குகிறது. நாவிற்கு சுவையளிக்கும் மிருதுவான இனிப்பு சுவை மிகுந்த இராமேஸ்வரம் பன் மஸ்கா வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை அரிசியை தூக்கி போடுங்க... இந்த பாரம்பரிய அரிசி வகை நன்மைகளைப் பாருங்க!
பன் மஸ்கா

பன் மஸ்கா செய்ய தேவையான பொருட்கள் பட்டியல்

பன் - 1

பசும்பால் - தேவையான அளவு

பாதாம் பவுடர் - 3 டீஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

பிஸ்தா பருப்பு - தேவையான அளவு

பட்டர் - தேவையான அளவு

அருமையான சுவையில் பன் மஸ்கா செய்முறை

ஒரு பன்னை அடிப்பகுதியில் இரண்டு பாதியாக கட் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பட்டருடன் சர்க்கரையை சேர்த்து நன்கு குழைத்து மென்மையாக சர்க்கரை கரையும் அளவிற்கு அடித்துக்கொள்ள வேண்டும்.

இதனை நாம் கட் செய்த பன்னின் இரு பகுதியில் தேய்த்து பன்னின் இரண்டு பகுதியை ஒட்டவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு பசும்பால் ஊற்றி பாதாம் பவுடர், சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பவுடர் ஆக்கி இதனுடன் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவேண்டும். இதில் பிஸ்தா பருப்பை சிறிது சிறிதாக கட் செய்து சேர்த்து கொள்ள வேண்டும். பட்டர் சர்க்கரை சேர்த்த பண்ணை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் நாம் காய்ச்சி வைத்திருந்த பசும்பால் பாதாம் பவுடர் கலவையை சேர்க்கவேண்டும். நா ஊரும் சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இராமேஸ்வரம் பன் மஸ்கா தயார்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவையில் சாமை அதிரசம் மற்றும் லட்டு: ஆரோக்கியமான இனிப்புத் தேடல் இதோ!
பன் மஸ்கா

இந்த பன் மஸ்கா தயாரிப்பதற்கு பசும்பால் பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த இயற்கையான நறுமணத்தை தருகிறது மற்றும் ஆரோக்கியத்திற்கும் பசும்பால் சிறந்த உணவு பொருளாகும். பசும்பாலில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையும் அல்லது கருப்பட்டியையும் கரைத்து நாம் சேர்த்துக் கொள்ளலாம். கருப்பட்டியில் அதிக அளவு உடலுக்கு நன்மையை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com