பாரம்பரிய சுவையில் சாமை அதிரசம் மற்றும் லட்டு: ஆரோக்கியமான இனிப்புத் தேடல் இதோ!

வீட்டிலேயே எளிமையாகச் செய்யப்படும் சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய சாமை இனிப்பு வகைகள்.
சாமை உணவு
சாமை உணவுAI image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

ன்றைய நவீன காலத்தில் பாரம்பரியமான உணவுப் பொருட்களை பலர் தவிர்த்து வருகின்றனர். ஆனால் அதில் தான் இயற்கையான பல நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.

சாமை தமிழ் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான சிறுதானிய வகை ஆகும். இவை எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகையாகும். இதில் விட்டமின் பி, விட்டமின் பி6, போலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலின் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.

இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள புரதம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. பாரம்பரியமான முறையில் சாமை சிறுதானியத்தைப் பயன்படுத்தி அதிரசம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - தேவையான அளவு

சாமை - 300 கிராம்

நாட்டு சர்க்கரை - 250 கிராம்

சுவையான சாமை உணவு: அதிரசம் செய்முறை விளக்கம்

சாமை சிறுதானியத்தை நன்கு மூன்று முறை அலசி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை நன்கு ஊறியவுடன் ஒரு காட்டன் துளியில் பாதி அளவு உலர்த்திக்கொள்ள வேண்டும். இவை நன்கு உலர்ந்த உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து கட்டிகள் இல்லாமல் சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பாகாக கரைத்துக்கொள்ள வேண்டும். பாகின் பதம், "நாட்டு சர்க்கரை பாகை நீரில் சேர்த்தால் அது உருண்டையாக இருக்க வேண்டும் நீரில் கரையாமல் இதுவே சரியான பதம் ஆகும்". இவ்வாறு தயார் செய்த பாவை நாம் அரைத்து வைத்திருந்த சாமை மாவுடன் நன்கு கலந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவேண்டும்.

பின் காலையில் அதனை எடுத்து வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு சூடாக இருக்கும் பொழுது அதிரசம் வடிவத்தில் தட்டி எண்ணெயில் சேர்த்து இரண்டு புறமும் நன்கு சிவந்து வரும்படி வேகவைத்து எடுக்க வேண்டும். சுவையான கம கமக்கும் பாரம்பரியமான சாமை அதிரசம் தயார்.

சாமை லட்டு ரெசிபி

லட்டு ரெசிபி என்றலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு அதனை அதிக சத்துக்கள் நிறைந்த சாமையில் செய்து கொடுப்பதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் உடையதாக இருக்கும். பாரம்பரியமான சாமை லட்டு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

சாமை உணவு
சாமை உணவுAI image

தேவையான பொருட்கள்:

சாமை - 500 கிராம்

நெய் - 100 மில்லி

முந்திரி - 10 கிராம்

உலர் திராட்சை - 10 கிராம்

ஃபுட் கலர் - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு

ஏலக்காய்ப் பொடி - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
ரசமலாய் தோத்துடும்! வீட்ல பன்னீர் இருக்கா? 10 நிமிஷத்துல இந்த பாயசம் செஞ்சு அசத்துங்க!
சாமை உணவு

குழந்தைகள் விரும்பும் சத்து மிகுந்த சாமை உணவு - லட்டு செய்முறை

சாமையை நன்கு இரண்டு முறை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு உரியவுடன் நன்கு வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி உலர் திராட்சையை சேர்த்து நன்கு சிவந்து வரும்படி வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலையில் வடிகட்டி வைத்திருந்த சாமையை சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுத்துக்கொள்ள வேண்டும். சாமை நன்கு வெந்து வரும் அளவிற்கு தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு ஃபுட் கலர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பீட்ரூட் வச்சு பிரியாணியா? ஆச்சரியப்படுத்தும் சுவையில் அசத்தல் ரெசிபி!
சாமை உணவு

சாமை நன்கு வெந்து வந்தவுடன் இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் வறுத்து வைத்திருந்த முந்திரி உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும். கை பொறுக்கும் பதத்தில் இருக்கும் போது லட்டு பிடிக்க தொடங்கவும். சுவையான கமகமக்கும் ஆரோக்கியமான பாரம்பரிய சாமை லட்டு தயார்.

இந்த ஆரோக்கியமான இனிப்பு வகைகளைத் தயார் செய்வதன் மூலம், செயற்கை இனிப்புகளுக்கு மாற்றாக இயற்கை சத்துக்கள் நிறைந்த உணவை உங்கள் குடும்பத்திற்கு வழங்கி, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே பலப்படுத்துவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com