பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

ஆரோக்கியத் தகவல்
பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும்.

டல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்.

னங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகமாகும்.

னங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

ர்க்கரைநோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங் கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

னங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

னங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, புரதம், சர்க்கரை, ஒமேகா-3, பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, வைட்டமின் சி மற்றும் தொகுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத்தந்து, அழகைக் கூட்டுகிறது.

னங்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றிற்கு துணை செய்கிறது.

தனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து இடித்து மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

மது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது பனங்கிழங்குன்னு சொல்லலாம். இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, மேல்

தோலையும் நடுவிலிருக்கும் சற்று கடினமான குச்சி போன்ற பகுதியையும் நீக்கி விட்டு சாப்பிட வேண்டும்.

வேகவைத்து பனங்கிழங்கை, சிறுசிறு துண்டுகளாக்கி, காயவைத்து, அத்துடன் கருப்பட்டியை சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட உடலுக்கு தேவையான இரும்புச்சத்து எளிதில் கிடைக்கும்.

னங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.

வேகவைத்து, நறுக்கி, காயவைத்து எடுத்து, அதை மாவாக்கி வைத்துக்கொண்டால், நாம் விரும்பும் சுவையில் தோசையாகவோ. உப்புமாவாகவோ அல்லது கூழ் தயாரித்தோ உண்ணலாம். 

நார்ச்சத்து மிகுந்த கிழங்கு என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். பனங்கிழங்கை வேகவைத்து, அத்துடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து மாவாக்கி சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். பனங்கிழங்கு பசியை தீர்க்கும்.

னங்கிழங்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி அதிகம் கிடைக்கும். அதை வாங்கி சாப்பிட்டு பயன்பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com