முதுமையில் வேண்டும் கவனம்.

முதுமையில் வேண்டும் கவனம்.

முதுமை வந்து விட்டாலே சுறுசுறுப்பானவர்களையும் சற்று நடை தளரச் செய்து விடும். வீட்டிலேயே முடக்கி போட்டு விடுகிறது. உடல் பலகீனம் ஆவதால் அடிக்கடி தரையில் விழுவதும், அடிபடுவதும் வழக்கமாகிறது.

டலை சரிசமமாக நல்லமுறையில் இயங்க வைக்கும் உறுப்புகளின் திறன் குறைவதால் நடையில் தடுமாற்றம், நேராக நடக்க முடியாமை போன்றவை வருகிறது.உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ள கண், காது, உள்காது, சிறுமூளை, தசைகள் மற்றும் மூட்டுகள் சரியானபடி செயல்பட வேண்டும். இதில் ஏதேனும் சிறு குறைபாடு நேர்ந்தாலும் உறுப்புக்களைத் தாக்கி நடை,பேச்சு,கேட்கும் திறன்,பார்வைக் குறைப்பாட்டைத் தந்து விடுகிறது.

யதானவர்கள் கீழே விழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. நரம்பு சார்ந்த நோய்கள், மூளையின் செயல்பாடு குறைதல், உதறுவாதம்,பக்கவாதம் ,காது சார்ந்த நோய்கள், கண் பார்வை மங்கல், மூட்டு வலி மற்றும் தசைகள் சார்ந்த நோய்கள்  என பல காரணங்கள் உள்ளன.

டுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்கும்போது ரத்த அழுத்த மாறுபாட்டால் நிலை தடுமாற்றம் ஏற்படும். இது தவிர வழுவழுப்பான தரை, மேடு பள்ளமான இடங்கள், படிக்கட்டுகள், மங்கிய ஒளியில் நடமாடுதல் போன்ற பல காரணங்களால் கீழே விழுந்து விடுகின்றனர்.

முதுமையில் கீழே விழாமல் இருக்க கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.காதில் ஏற்படும் பிரச்சனை களுக்கு மருத்துவரிடம் சென்று பரிசோதித்து ட் ரீட்மெண்ட் தேவையெனில் தயங்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக டோஸ் கொண்ட மருந்துகளால் மயக்கம் வரலாம். மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

சில பழக்கங்களை தவறாது பின்பற்ற முதுமையில் ஏற்படும் தடுமாற்றம், கீழே விழுதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். படுக்கையிலிருந்து சட்டென்று எழாமல் சற்று நிதானமாக எழுந்தால் மயக்கம், கிறுகிறுப்பு வராது. கைத்தடியை உபயோகிக்க நல்ல சப்போட்டாக இருக்கும்.

கால்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிதல்,தினமும் முடிந்த அளவு உடற்பயிற்சி, தசைகள் மூட்டுகளை வலுவாக்கும் சமச்சீர் உணவு,மனதை திருப்தியாக, சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவை நல்ல தீர்வாக அமையும்.

டுக்கை அறை, குளியல் அறைகளில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். படிக்கட்டுகள், சாய்வான, சரிவான தளங்களில் கவனமாக நடத்தல், உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ள கீழே விழாமல் இருக்க உதவும். அதிக ஈரம்,வழுக்கும் தரையில் கவனம் வேண்டும். குளியலறை, கழிவறைகளில் சுவரின் பக்கவாட்டில் கைப்பிடி பொருத்திக் கொள்ள பிடிமானத்திற்கு உதவியாக இருக்கும். தங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பட்சத்தில் கஷ்டங்களை தவிர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com