
இந்த மழைக் காலங்களில் எங்கு பார்த்தாலும் ஈரம்,துணிகளை காய வைக்க முடியாமல் வீட்டிற்குள்ளே போடுவதால் ஈர வாடை என கஷ்டம் தான்.
இதைப் போக்க
கடல் உப்பு அல்லது கல் உப்பை ஒரு பிடி எடுத்து மெல்லிய துணியில் கட்டி அறையின் ஓரத்தில் கட்டியோ தொங்கவிட்டோ வைக்க உப்பு ஈரத்தை உறிஞ்சி கொள்ளும்.இரண்டு நாளைக்கு ஒருமுறை உப்பை மாற்றலாம்.
ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை ஊற்றி ஒரமாக வைக்கவும்.மாற்றவேண்டிய அவசியமில்லை.அப்படியே விட்டு விட ஈர வாடை மறைந்து விடும்.
கற்பூரத்தை ஏற்றி வைக்க ஈரம் குறையும்.பச்சை கற்பூரத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து ஃபேன் காற்றில் கரைந்தால் நறுமணமாக இருப்பதோடு கெட்ட வாடை போய்விடும்.
காம்புடன் வேப்பிலை கொத்தை துணி அலமாரியில் வைக்க பூஞ்சை வராமல் இருக்கும்.
சாக்பீஸை அலமாரியில் வைக்க ஈரத்தை உறிஞ்சி விடுவதோடு வாடை வராமல் தடுக்கும்.
வசதி இருப்பின் லாவண்டர் ஆயில்,ரோஸ் ஆயில் இவற்றை பஞ்சில் தொட்டு காற்று வரும் இடத்தில் வைக்க நல்ல நறுமணம் வரும்.
சாம்பிராணி புகை போட கிருமிகள் அழிந்து ,ஈரவாடையை நீக்கி வாசம் தரும்.
ஈரத் துணிகளை சற்று நேரம் பேன் காற்றில் காயவிட்டு பின் ரூம் _ல் போட அறை வாடையின்றி சுத்தமாக இருக்கும்.
சென்ட் நறுமணமுள்ள கேண்டிலை ஏற்றி வைத்தால் ஈர வாசம் வராது.
மேற்கண்டவைகளை செய்தால் மழைக் காலங்களில் ஈர வாசம் நீங்கி வீடு தூய்மையாக நறுமணத்துடன் இருக்கும். பூச்சி, பூரான் போன்றவைகளின் தொல்லைகளும் இருக்காது .