செவ்வாழை
செவ்வாழை

தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுங்க.....!

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

எடையைக் குறைத்தல்:

பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்தஉணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களைவிட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர்தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம்எடுக்காமல் இருக்கும்.

சிறுநீரக கற்களைத் தடுக்கும்:

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில்கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும்மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்கதினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.

இரத்த அளவை அதிகரிக்கும் :

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்:

செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். செவ்வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது. எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சல்:

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படு பவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com