பனிக்காலமா? இனி கவலை வேண்டாம் ...!

பனிக்காலமா? இனி கவலை வேண்டாம் ...!

மழை முடிந்து பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த குளிர் காலத்தில் சரும ரீதியாக பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.வீட்டிலிருந்தே நம் சருமம் ,முடி போன்றவை வறண்டு போகாமல் இருக்க எளிய வழிமுறைகளை மேற்கொண்டால் பிரச்சினை இருக்காது.

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் .

தோல் ஈரம் பதத்தை தக்க வைக்க தே.எண்ணெய் தடவி வர எளிமையான தீர்வாக சருமம் மென்மையாக இருக்கும்.

பழங்கள்,பச்சைக் காய்கறிகள் ,புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள சரும வறட்சி ,தோல் அரிப்பு போன்றவை வராது.

வெளியில் செல்லும் போது காதுகளை மூடி குளிர்,பனி தாக்கத் வண்ணம் மப்ளர்,தலைக் குல்லா கையுறை அணிய சருமம் வறண்டு போகாமல் இருக்கும் .

முகவறட்சியை நீக்க பாதாம் பருப்புடன் பால் சேர்த்து அரைத்துக் கொண்டு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளபளப்பாகவும், ஃப்ரெஷ் ஆகவும் இருக்கும்.

பப்பாளி விழுதுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி ஊறியதும் கழுவ ,சருமம் சுத்தமாக இருக்கும்.

கற்றாழை ஜெல் தடவி வர மேனி பளிச்சென்று மாசு மரு இன்றி வழவழப்பாக இருக்கும்.

சோப்பு வறட்சியை அதிகமாக்கும்.முகத்திற்கு வெண்ணெய் தடவி பின் பாசிப்பயறு மாவு கொண்டு கழுவிட முகம் ஈரப்பதத்துடன் நன்றாக இருக்கும்.

கேரட் சாறு,பால் ஏடு,தேன் கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் ஆக போட முகம் பளபளப்பாக இருக்கும்.

உதடுகளுக்கு லிப் பாம் , அல்லது வெண்ணெய் தடவி வர வெடிப்பின்றி வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.

தே எண்ணெய்,வாசலைன் , கோல்ட் க்ரீம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ரெகுலராக தடவி வர குளிர் கால பாதிப்புகள் வராது.

மாய்ச்சரைசிங் க்ரீம்,ஃபுட் க்ரீம் உபயோகிக்க சருமம் பாதுகாப்பாக பொலிவுடன் இருக்கும்.

மாதங்களுக்கு ஃபுட் க்ரீம் தடவி சாக்ஸ் போட்டு இரவில் படுக்க பாதம் மென்மையாக இருக்கும்.

பாத எரிச்சல்,பாத வெடிப்பு ஏற்படாமல் இருக்க பாதத்தை நன்கு கழுவி ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் .

வீட்டில் இருக்கும் போதும் காலணி அணிந்து கொள்ள பாத வெடிப்பு , வறட்சி ஏற்படாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com