செவ்வாழையின் மருத்துவ குணங்கள்!

செவ்வாழை
செவ்வாழை

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது.

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு போன்றவற்றை செவ்வாழைப்பழம் நிவர்த்தி செய்கிறது.

கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம், கர்ப்பிணி பெண் மற்றும் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மைகளை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கல், மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர செவ்வாழை உதவுகிறது.

இரத்த மண்டலத்திற்கும், கண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

செவ்வாழை  பழம்
செவ்வாழை பழம்

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

அனைத்து வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப் பழம் குணமாக்கும்.

தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப் பழம் சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு அரை தேக்கரண்டி தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும்.

தொற்று நோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப் பழத்தில் உள்ளது.

மூளை எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க செய்வதில் செவ்வாழைப் பழம் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com