பள பள  "பலாப்பழம்"!

பள பள "பலாப்பழம்"!

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது ,மருத்துவ குணம் கொண்டது.

இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம்,இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சில :

பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்தநோயும் வராமல் தடுக்கிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

புற்று நோய்களில் பல வகைகள் இருக்கிறது. இதில் மனிதர்களின் குடலில் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது ஆகும். மேலை நாடுகளில் பலர் இறக்க காரணமாக குடல் புற்று நோய் இருக்கிறது. பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com