பத்து மிளகு இருந்தால் போதும்...!

பத்து மிளகு இருந்தால் போதும்...!

மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கும் . பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கும்.

மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்.

* ஒரே ஒரு மிளகு போதும் உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளிகாணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசுமுசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்தசுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசிஎடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் உண்ணலாம்

  • திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா அந்த பிரச்சனைகள்ல இருந்து விடுபடலாம்.

  • திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்குது. இந்த திரிகடுகு சூரணம் நம்ம ஈஷா ஆரோக்கியாவிலயே நாம வாங்கிக்க முடியும்

  • டெய்லி பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்த்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.

  • சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com