தயிர் சாதம்
தயிர் சாதம்

உடலுக்கு ஆரோக்கியம் தயிரா? மோரா?

டல் சூட்டை தணிக்கவும், வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் பொதுவாக, தயிர் சாதம் பரிந்துரைக்கப்படுகிறது. அதேவேளையில் அது உடல் சூட்டைக் கிளப்பிவிடும் என்பதும் ஒருசிலரின் கருத்தாக உள்ளது. நாம் நினைப்பதுபோல் தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதில்லை. தயிரில் உள்ள நொதித்தல் தன்மை காரணமாக இது உடலை குளிர்ச்சியாக்குவதற்கு பதிலாக சூடுபடுத்துகிறது. இது ஜீரணிக்கவும் கால தாமதமாகும். தயிருடன் தண்ணீர் சேர்த்த அடுத்த நிமிடத்திலேயே அதன் நொதித்தல் தன்மை நின்று விடும். எனவே தயிரை விட, மோர் உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மையைக் கொண்டுள்ளது.

சாதாரணமாக சாப்பிடும்போது தயிரைப் பயன்படுத்தலாம். தயிரில் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் நமது குடலைச் சென்றடையும்போது, ​​அது செரிமானம் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இருப்பினும், உடல் பருமன், ரத்தப்போக்கு மற்றும் அழற்சி பிரச்னை உடையவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும். மேலும், சளி, இருமல், சைனஸ், செரிமானக் கோளாறு பிரச்னைகள் உள்ளவர்களும் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இரவில் தயிரை உணவில் சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிட்டிகை மிளகு அல்லது வெந்தயத்தை அதனோடு சேர்த்து பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மோர்
மோர்

யிரை சூடாக்கும்போது அதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியக்கூடிய வாய்ப்புள்ளதால் அதைத் தவிர்க்கலாம். கிராமப் பகுதிகளில் அமிர்தத்துக்கு இணையாக மோர் பார்க்கப்படுகிறது. ஒரு டம்ளர் தண்ணீருடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை அடித்து, சிறிதளவு சீரகப் பொடி, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் குடிக்கும்போது அதன் சுவையே அலாதியானது. அதேவேளையில், தயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்துகிறவர்களும் உள்ளனர். தயிரைக் கடைந்து அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர்.

துவர்ப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன்கூடிய மோர் ஜீரணிக்க எளிதானது. கால்சியம் குறைபாடு, வயிற்றில் உண்டாகும் எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண், பசியின்மை, இரைப்பை, குடல் கோளாறுகள் மற்றும் ரத்தச்சோகை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கும் மோர் தீர்வாக உள்ளது. இது உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. எனவே, தயிரை விட உணவில் சேர்த்துக்கொள்ள மோரே சிறந்தது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com