உங்க குழந்தைகளின் சம்மர் விடுமுறையை வேற லெவலுக்கு கொண்டு போகணுமா? இதோ 10 சூப்பர் ஐடியாஸ்!

10 activities
10 activities
Published on

சம்மர் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்கள்:

பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலே இசை, ஹிந்தி, ஆங்கில வகுப்புகள் போன்ற சம்மர் கிளாஸ் செல்வது பழைய டிரெண்ட் ஆகிவிட்டது. தற்போது வெப்பம் மிக அதிகமாக இருப்பதும், வாழ்க்கை முறை மாற்றங்களும் காரணமாக, குழந்தைகள் சம்மர் கிளாஸ்களில் நேரடியாக பங்கேற்க விருப்பம் காட்டுவதில்லை. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் நவீன உலகத் தேவைகளை உணர்ந்து, வீட்டிலிருந்தே பலவகையான திறமைகளை சுலபமாகவும், இலவசமாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது.

இந்த டிரெண்டான கற்றல் முறை, மாணவர்களுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டும் இல்லாமல், கல்வி மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த செயல்முறை கற்றலையும் வழங்குகிறது.

இவை அனைத்தும் வீட்டிலிருந்தே செலவில்லாமல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தருகின்றன. அவ்வாறு பயனுள்ள வகையில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

1) கான்டென்ட் கிரியேஷன்:

குழந்தைகள் தங்களின் குரலில் சிறிய வீடியோக்கள் உதாரணமாக ரீல்ஸ், குறும்படம் போன்றவற்றை உருவாக்கி, அடிப்படை எடிட்டிங் கற்றுக்கொள்ளலாம். அதில் புதிய கதைகள், காமெடி, அல்லது பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

2) கோடிங் பயிற்சி:

பயனுள்ள செயலிகள் மூலம் குழந்தைகள் அடிப்படை கோடிங் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்குவதில் ஆர்வம் வளர்க்கலாம்.

3) டெக் திட்டங்கள்:

ரோபோடிக்ஸ் கிட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி, வீட்டிலேயே சிறிய ரோபோட், லைட் சென்சார் போன்ற திட்டங்களை உருவாக்கலாம். இது குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவையும், படைப்பாற்றலையும் மேம்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் விருப்பங்கள் - தேவையா? இது நன்மை பயக்குமா?
10 activities

4) பாட்காஸ்ட் பதிவு:

குழந்தைகள் தங்களின் குரலில் சிறிய பாட்காஸ்ட் எபிசோட்கள் (கதைகள், புத்தக விமர்சனங்கள், நகைச்சுவை) பதிவு செய்யலாம். ஆங்கர், ஆடாசிட்டி போன்ற செயலிகள் மூலம் ஒலி எடிட்டிங் கற்று நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து கருத்துக்களை கேட்கலாம்.

5) டிஜிட்டல் கலை மற்றும் அனிமேஷன்:

ப்ரோ கிரியேட், ஸ்கெட்ச்புக் போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் ஓவியம், கார்டூன் உருவாக்கலாம். இது எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு ஒரு சிறய அடித்தளமாக அமையும்.

6) தனிப்பட்ட வலைத்தள உருவாக்கம்:

என் கலைத் தொகுப்பு, என் கதைகள், என் அறிவியல் திட்டங்கள் என மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்கலாம்.

7) பசுமை திட்டங்கள்:

பழைய பொருட்களை புதுப்பித்தல், நீர் சேமிப்பு யோசனைகள் என வீட்டில் பசுமை மாற்றங்களை செய்ய திட்டமிடலாம். இவற்றை வீடியோ தொடர்களாகவும் பதிவு செய்யலாம்.

8) புத்தக விமர்சனம்:

வாசிக்கும் புத்தகங்களை படைப்பாற்றலுடன் விமர்சனம் செய்து, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரலாம். இது வாசிப்பு பழக்கத்தையும், சமூக ஊடக திறன்களையும் மேம்படுத்தும்.

9) மெய்நிகர் கற்றல்

அடிப்படை விஆர் செயலிகள் மூலம், விண்வெளி ஆராய்ச்சி, கடல் கீழ் உலகம் போன்ற மெய்நிகர் கல்வி பயணங்களை அனுபவிக்கலாம். இது மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.

10) புதிய திறன்களை கற்றல்

30 நாட்களில் ஒரு புதிய திறனை கற்றுக்கொள்ளும் சாவல்களை எடுத்து கொண்டு மாணவர்கள் பயில வேண்டும்.

கிராஃபிக் டிசைன், மீம் கிரியேஷன், வீடியோ எடிட்டிங், புகைப்படக் கலை என ஒவ்வொரு நாளும் சிறிய பயிற்சி பணிகளை வைத்து கற்று கொண்டால் இந்த விடுமுறையில் அனுபவ கற்றலோடு மகிழ்ச்சியாக செயல்பட முடியும்.

இந்த 10 பயனுள்ள செயல்கள், குழந்தைகளின் படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் சமூக ஊடக திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும். இந்த மாற்றத்தை பெற்றோரும் மாணவர்களும் புரிந்துகொண்டு வீட்டில் இருந்தபடியே, பயன்படுத்தினால், விடுமுறை காலம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதையும் படியுங்கள்:
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோரா நீங்க? அப்போ இந்த ஏழு விஷயங்கள் முக்கியமாச்சே!
10 activities

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com