60 வயதிலும் ஆரோக்கியமாக வாழ 10 எளிய வழிகள்!

60 வயதிலும் ஆரோக்கியமாக வாழ 10 எளிய வழிகள்!

யது ஏற ஏற மனதில் ஒரு குழப்பம் வரும். நம்முடன் இருப்பவர்க்கு பாரமாக இல்லாமல், உற்சாகமாக இருப்பதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திக்கத் துவங்குவோம். உடல் நலம் குறித்து யார் எது சொன்னாலும் அதை அப்படியே கடைபிடிக்கும் ஆசை வரும். அறுபது வயதிலும் ஆரோக்கியமாக வாழ சில எளிய வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. மனதை உங்களுக்குப் பிடித்த விஷயங்களின் பக்கம் மட்டும் செலுத்துங்கள். மனம் விரும்பாத எதுவாக இருந்தாலும் அதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

2. தினமும் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். வாசிப்பு உங்கள் சிந்தனையை தூண்டி மூளையை சுறுசுறுப்பாக்கும். இதனால் மனநலமும் மேம்படும்.

3. காபி, டீ அருந்துவதை விட்டு விடுவது நல்லது. இதனால் அஜீரணம் மற்றும் தூக்கமின்மை ஏற்படும் வாய்ப்புண்டு. இதற்குப் பதிலாக காய்கறிகள் சூப், சிக்கன் சூப் போன்ற சூப் வகைகள் நல்லது.

4. உடலில் குறையும் கால்சியத்தை சமன்படுத்தும் வகையில் பகல் உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

5. மறக்காமல் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனுக்கு நன்றி சொல்லி வழிபடுங்கள். இறைவனை நினைக்கும்போது அமைதியுறும் மனம் பக்குவமும் பெறும்.

6. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அளவளாவ மறவாதீர்கள். அவர்கள் வேலை வேலை என்று ஓடிக்கொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் ஈகோ பார்க்காமல் அவர்களிடம் சென்று பேச வேண்டும். உங்களின் அக்கறை அவர்களையும் நெருங்க வைக்கும்.

7. முக்கியமாக, பேரப்பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு கதை சொல்வது, வாக்கிங் செல்வது, தோட்டம் பராமரிப்பது, சிரித்துப் பேசுவது என்று நேரங்களை மதிப்பு மிக்கதாக்கி மகிழுங்கள்.

8. இரவு நேர உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. குறிப்பிட்ட நேரம் படுத்து, காலையில் குறிப்பிட்ட நேரம் எழுவதை பழக்கப் படுத்துவது உடல் ஓய்விற்கும் நலத்திற்கும் நல்லது.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!
60 வயதிலும் ஆரோக்கியமாக வாழ 10 எளிய வழிகள்!

9. இரவு சாப்பாட்டை முடிந்த வரை 7 அல்லது 7.30 மணிக்குள் முடிப்பது நன்மை தரும். எளிதில் ஜீரணம் ஆகும் ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மதிய உணவில் தயிர் இருப்பது குடல் பாதிப்புகளைத் தடுக்கும். மறவாமல் பழங்கள் சாப்பிடுங்கள்.

10. வயது ஆக ஆக தூக்கம் இன்மை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரைகள் எடுப்பதை தயவுசெய்து தவிருங்கள். மிதமான உணவு, நிதானமான மூச்சுப்பயிற்சி, தெளிவான நடைப்பயிற்சியை பழக்கமாக்குங்கள். இதனால் ஆழந்த உறக்கம் நிச்சயம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com