Situations to avoid to succeed in life
Situations to avoid to succeed in life

வெற்றிக் கனியை தட்டிப் பறிக்க விலக்க வேண்டிய 10 சூழ்நிலைகள்!

Published on

பிடிக்காத வேலை, உறவு, சூழ்நிலை போன்றவற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு விலகுவது என்பது தோல்வியை குறிக்காது. சில நேரங்களில் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு வெளியேறுவதே சிறந்த தேர்வாக இருக்கும். அது எந்த மாதிரி சூழ்நிலைகள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நச்சு உறவுகள் (Toxic Relationship): தீமை தரும் உறவுகள், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காதல், தொழில், தீங்கு விளைவிக்கும் நண்பர்கள் அல்லது தவறான நட்பு, உறவு போன்றவற்றில் இருந்து உடனே விலகிச் செல்வதுதான் சிறந்தது.

2. ஆரோக்கியமற்ற பணிச் சூழல்: தான் பார்க்கும் வேலை, ஒருவருக்கு மிகுந்த மனப்பதற்றம், மன அழுத்தம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்றால் அங்கிருந்து வெளியேறுவதுதான் மிகச் சிறந்த வழி.

3. திருப்தி தராத தொழில்: தான் செய்துவரும் பிசினஸ் ஒருவரது உணர்வுகள் அல்லது குறிக்கோள்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அதை சற்றும் யோசிக்காமல் விட்டு விடுவது சிறந்தது. இன்னும் நிறைவான ஒன்றைத் தேடி அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் தினமும் அகர்பத்தி ஏற்றுகிறீர்களா? ஒரு சிகரெட் பிடிப்பதற்கு சமமான பேராபத்து.. நிபுணர் எச்சரிக்கை!
Situations to avoid to succeed in life

4. தனிப்பட்ட வாழ்வு: ஒரு சூழ்நிலையின் காரணமாக உடல் அல்லது மன ஆரோக்கியம் ஆபத்தாக இருக்கும்போது சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க அதிலிருந்து வெளியேறுவது அவசியம்.

5. நிதி நெருக்கடி: நிதி நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்தால், குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தினால் அதை விட்டுவிட்டு மாற்று வழிகளை தேடுவதே புத்திசாலித்தனம். அதிக வாடகை கொடுத்து ஒருவரால் ஒரு வீட்டில் இருக்க முடியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு தனது வருமானத்திற்கு ஏற்ற வாடகை வீட்டை தேடிக்கொள்ளுதல் நலம்.

6. முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி இல்லாத நிலை: ஒருவருடைய புதிய திட்டங்கள் வளர்ச்சியோ முன்னேற்றமோ இல்லாமல் இருந்தால் அல்லது முன்னேற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றால் அதிலிருந்து வெளியேறி மற்றொரு புதிய திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்துவதுதான் நல்லது. அதிலேயே தொடர்ந்து நீடித்திருந்தால் நஷ்டம் வந்து சேரும்.

7. நெறிமுறை சங்கடங்கள் (Ethical Dilemmas): ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னுடைய நெறிமுறைகளையும் கொள்கைகளையும் சமரசம் செய்யும் நிலை ஏற்பட்டால் அதை விட்டு விலகுவதே நல்லது. அப்போதுதான் அவரால் தன்னுடைய மன ஒருமைப்பாட்டை பேணுவதற்கு சிறந்த வழியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிச்சனில் இந்த 3 பொருள்களை இப்படி வெக்காதீங்க! வாஸ்து கூறும் அதிர்ச்சி ரகசியம்!
Situations to avoid to succeed in life

8. இழந்த ஆர்வம்: முன்பு உற்சாகப்படுத்திய ஏதாவது ஒன்று தற்போது ஒருவருக்கு ஆர்வத்தையோ அல்லது உற்சாகமோ தரவில்லை என்றால் அதை விட்டுவிட்டு வெளியேறி விட வேண்டும். உற்சாகத்தைத் தூண்டும் ஆர்வத்தை தரும் வேறு ஒன்றை நோக்கி தனது ஆற்றலை திருப்பி விடுவது சிறந்தது.

9. பாதுகாப்பு கவலைகள்: ஒரு சூழ்நிலை சம்பந்தப்பட்ட நபருக்கு அல்லது அவரைச் சார்ந்த மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதை விட்டு வெளியேறுவது சிறந்த நடவடிக்கை ஆகும்.

10. முற்றுப்புள்ளியை அடைந்திருந்தால் (Dead end): சில சமயங்களில் சிறந்த கடுமையான முயற்சிகள் இருந்தபோதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேன்மைக்கான வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கும்போது அதில் இருந்து வெளியேறி விட வேண்டும். புதிய முன்னேற்றம் தரும் மேன்மை தரும் சாத்தியக்கூறுகள் உள்ள வாய்ப்புகளைத் தேட வேண்டும்.

ஒருவருடைய நல்வாழ்வு வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தந்து ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளை விட்டு விலகிவிடுவதே புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான தேர்வாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com