1. தெளிவான நிதி இலக்குகளை நிர்ணயித்தல்: ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தெளிவான நிதி இலக்குகளை அமைத்துக்கொள்வது, கடன்கள் மற்றும் முதலீட்டு விருப்பங்களைப் பார்ப்பது போன்றவற்றை திட்டமிடல் வேண்டும். நீண்ட கால இலக்கை அடைய யதார்த்தமான மற்றும் காலக்கெடுவை கொண்ட, அடையக்கூடிய இலக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2. பயனுள்ள காப்பீட்டு திட்டங்கள்: காப்பீட்டு திட்டங்கள் நம் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், நிதி சிக்கல்களுக்கு எதிராக நம் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் முக்கியமானது. உடல் நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை தேர்ந்தெடுக்கும்பொழுது நம்மைச் சார்ந்தவர்களை கணக்கெடுத்துக் கொள்வதுடன் கவரேஜ் பாலிசி மற்றும் கிடைக்கும் தள்ளுபடிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. அவசர நிலைக்கு போதுமான நிதி: மருத்துவ அவசரநிலை மற்றும் எதிர்பாராத செலவுகளுக்காக எப்போதும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது நல்லது. ஆறு மாதங்களாவது செலவுகளை ஈடுகட்ட போதுமான அளவு சேமிப்பது போன்ற அவசர நிலைக்கு பணத்தை சேமித்து வைப்பது மிகவும் அவசியம்.
4. நேர்மை: வருட ஆரம்பத்தில் இருந்தே நம்மால் முடிந்த அளவு நேர்மையாக இருக்க முயற்சி செய்யலாம். நேர்மை என்பது ஒரு அருமையான அணிகலன். நேர்மைப் பண்பு பொதுவாக பணம் கொடுக்கல், வாங்கலோடு மட்டுமே தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால். உண்மையில் பணத்தைத் தாண்டி மனம், வாக்கு, செயல் அனைத்திலுமே நேர்மையை கடைப்பிடிப்பது சிறந்தது.
5. புத்தம் புது விஷயங்களில் கவனம்: புத்தம் புது விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.புதிது புதிதான விஷயங்களில் மனதை ஈடுபடுத்தலாம். புதுமையான செயல்களில் ஈடுபடலாம். அது நமக்கு மகிழ்ச்சி தருவதுடன் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் உற்சாகத்தைத் தரும்.
6. இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுதல்: நாம் என்னவாக வேண்டும் என்று நமக்கான உள்ள கனவுகளை எளிதில் அடைவதை நோக்கி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு பயணிக்க நாம் நினைத்தது நிறைவேறும். நாம் கண்ட கனவு இலக்கை நோக்கி பயணிப்பது நம்மை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் உணர வைக்கும்.
7. தியானம் பழகுதல்: எவ்வளவு வேலைச் சுமை இருந்தாலும் நேரமில்லை என்று ஒதுக்காமல் தினமும் மனதை செம்மையாக்க, அமைதிபடுத்த, தெளிவுபடுத்த சிறிது நேரம் தியான பயிற்சியை மேற்கொள்ளலாம்.
8. கற்றல்: புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள முன்வரலாம். நேரத்தை ஆக்கபூர்வமான செயல்களில் செலவிடலாம். புது புது விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி பெறும். அறிவாற்றலும் பெருகும். மனம் விசாலமடையும்.
9. சருமப் பராமரிப்பு: என்றும் இளமையான தோற்றத்தைப் பெற சரும பராமரிப்பு அவசியம். சருமத்தை பொலிவுடன் பாதுகாக்க அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும், வீட்டிலேயே அழகை கூட்டுவதற்கு இயற்கையான முறையில் இயற்கை பொருட்களைக் கொண்டு அழகு படுத்திக்கொள்ளலாம்.
10. நீரேற்றமாக வைத்துக்கொள்ளுதல்: தினமும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க உடல் நீரேற்றமாக இருக்கும். இதனால் எளிதில் நோய்கள் எதுவும் நம்மை அண்டாது. சருமமும் பளிச்சென மின்னும். மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.