குழந்தைகள் முன் பெற்றோர் பேசக்கூடாத 10 விஷயங்கள்!

Things parents shouldn't talk about in front of their children
Things parents shouldn't talk about in front of their children
Published on

பெற்றோர்கள் பேசும் சில வார்த்தைகள் கூட குழந்தைகளுக்கு மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் பிள்ளைகள் முன் பெற்றோர் பேசக்கூடாத 10 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. நிதி பிரச்னைகள்: பெற்றோர்களுக்கு நிதி தொடர்பான பிரச்னைகள் இருந்தால், இந்த வார்த்தைகள் பிள்ளைகளின் காதில் விழுந்தால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு, குடும்ப ஸ்திரத்தன்மை, எதிர்காலம் குறித்த தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும். தங்கள் வாழ்க்கை என்னவாகும் என்ற பயம் அதிகரித்து, பாதுகாப்பின்மை உணர்வுக்கு ஆளாகி, உணர்ச்சி ரீதியாக மிகவும் சோர்வடைவார்கள்.

2. அரசியல் கருத்துக்கள்: சர்ச்சைக்குரிய அரசியல் விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை அல்லது தீவிர கருத்துக்களை வெளிப்படுத்துவது, இளம் மனங்களில் குழப்பத்தை அல்லது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கருத்துக்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கொலஸ்ட்ராலை அதிகரிக்காத வெண்ணெய்க்கு மாற்றான 10 பொருட்கள்!
Things parents shouldn't talk about in front of their children

3. மற்றவர்களை அதிகமாக விமர்சிப்பது: உங்கள் பிள்ளைகள் முன் மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவது, மற்றவர்களைப் பற்றிய அவர்களின் புரிதலைப் பாதித்து, எதிர்மறையை அதிகரிக்கும் என்பதால் மற்றவர்களை விமர்சிக்கக் கூடாது.

4. இறப்பு பற்றி: பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால் தவிர, இறப்பு பற்றிய விவாதங்களால் அவர்களை மூழ்கடிக்காமல் அந்த விஷயத்தை மென்மையாகக் கையாளவும்.

5. வேலை தொடர்பான மன அழுத்தம்: அலுவலக மன அழுத்தம் அல்லது வேலை தொடர்பான பிரச்னைகளைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வது,  தேவையற்ற கவலையை உருவாக்கி, குடும்பத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்து  கவலைப்பட வைக்கும் என்பதால் அவற்றை பகிர வேண்டாம்.

6. உடல்நலப் பிரச்னைகள்: சில பிரச்னைகளை விளக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், உங்கள் பிள்ளைகள் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் அல்லது சிகிச்சைகள் குறித்து கவலைப்படாமல் இருக்க நாசூக்காக கையாள வேண்டும்.

7. பாலியல் விஷயங்கள்: பிள்ளைகளின் வயதைக் கருத்தில் கொண்டுஅவர்கள் முன் பாலியல் தலைப்பு விஷயங்களைப் பேசக்கூடாது. அவை பிள்ளைகளுக்கு அந்த தலைப்பில் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதால் சிறு வயதிலேயே அந்த விஷயங்களை அவர்களிடம் பேசக் கூடாது.

8. குடும்ப உறுப்பினர்கள்: உறவினர்கள் அல்லது குடும்ப வரலாறு பற்றிய எதிர்மறையான கதைகளைப் பகிர்ந்துகொள்வது  தேவையற்ற பாரபட்சம் அல்லது கோபத்தை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
குடும்ப நிதி தேயாமல் பெருக கடைபிடிக்க 11 யோசனைகள்!
Things parents shouldn't talk about in front of their children

9. உறவுப் பிரச்னைகள்: பிள்ளைகள் முன் திருமண மோதல்கள் அல்லது தனிப்பட்ட உறவுப் பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பது பாதுகாப்பின்மை, குழப்பம் மற்றும் உணர்ச்சி ரீதியான அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

10. விவாகரத்து திட்டங்கள்: விவாகரத்து செய்ய நினைத்தால் பிள்ளைகள் முன் வெளிப்படையாக விவாதிக்காமல், கவனமாக, வயதுக்கு ஏற்றவாறு உரையாடலை நடத்துவது மிகவும் முக்கியம்.

மேற்கூறிய பத்து விஷயங்களையும் பெற்றோர்கள். குழந்தைகள் முன் விவாதிப்பதை அவசியம் தவிர்ப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கும் மன நலனிற்கும் மிகவும் நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com