ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்ப நிதி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இந்த குடும்ப நிதி ஒவ்வொரு ஆண்டும் ஏற்றம் பெற வேண்டுமே ஒழிய, இறக்கம் பெறக் கூடாது. அது இறக்கம் பெற்றால், அது ஏன் என்பதை நிச்சயம் ஆராய வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குடும்பம் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக அமையும். குடும்ப நிதி தேயவும் சிதையவும் காரணமாக விளங்கும் காரணிகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்.
2. சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்.
3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது.
4. வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சென்று சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது.
5. சீரழிந்த வாழ்க்கை முறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது.
6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது.
7. ஒன்றாக சேர்ந்து நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழாவை கொண்டாட செலவழிப்பதன் மூலம்.
8. பிரம்மாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்.
9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்.
10. தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்து விட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.
11. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச் செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது.
நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்துகொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும்.
இனியாவது குடும்ப நிதியை காப்பாற்ற நாம் மேற்கண்ட காரணங்களை ஆராய வேண்டியது அவசியம். அது மட்டுமின்றி, மேற்கண்டவற்றிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதையும் யோசித்து, ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப நிதியை காப்பாற்ற வேண்டியது அவசியம்.