
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் அவனது உணவுப் பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எதை, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விட சாப்பிட்ட பின் செய்யக்கூடாத 10 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. உடனடியாக தூங்க வேண்டாம் :
சாப்பிட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். ஏனெனில் அமில வீச்சு மற்றும் அஜீரணத்தை தடுக்க இது உதவுகிறது.
2. கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் :
கடுமையான உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பு உடலுக்கு உணவை ஜீரணிக்க நேரம் கொடுக்க வேண்டும். ஆகவே சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி ஆரம்பிக்க வேண்டும்.
3. புகைபிடிக்க கூடாது :
சாப்பிட்ட பிறகு புகை பிடிப்பது, செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்றுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, அமில வீச்சு போன்ற நிலைமைகளை மோசமாக்கும் என்பதால் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது :
சாப்பிட்ட பிறகு உடனடியாக அதிகப்படியான தண்ணீர் குடிப்பது மோசமான செரிமானம், வீக்கம் மற்றும் அசௌகரித்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்கக்கூடாது.
5. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் :
வயிற்றில் அழுத்தம் கொடுத்தால் செரிமானம் மோசமடையும் என்பதால் இதனை தடுக்க தளர்வான வசதியான ஆடைகளை அணிய வேண்டும்.
6. குளிக்கக் கூடாது :
சாப்பிட்ட பிறகு சூடான நீரில் குளிப்பதால் இரத்த நாளம் விரிவடைந்து மோசமான செரிமானம் மற்றும் அசௌகரியத்திற்கு வழி வகுப்பதால் சாப்பிட்ட பின் குளிக்கக் கூடாது.
7. மனஅழுத்த செயல்களைத் தவிர்க்கவும் :
மனஅழுத்தம் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் அதனைத் தவிர்க்க நிதானமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
8. காஃபின் அல்லது ஆல்கஹால் உட்கொள்ள வேண்டாம் :
சாப்பிட்ட பின் காஃபின் அல்லது ஆல்கஹால் சாப்பிடுவது வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்டவுடன் உட்கொள்ளக்கூடாது.
9. சிறிது நேரம் திரைகளைத் தவிர்க்கவும் :
திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, மெலடோனின் உற்பத்தியைத் தடுத்து, தூங்குவதை கடினமாக்கும் என்பதால் சாப்பிட்ட பிறகு செல்போன், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
10. அதிகமாக உழைக்காதீர்கள் :
சாப்பிட்ட பிறகு அதிக எடையைத் தூக்குதல், குனியச் செய்தல் போன்றவை வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி செரிமானத்தை மோசமாக்குவதால் சாப்பிட்ட பிறகு அதிகமாக உழைக்காதீர்கள்.
சாப்பிட்ட பிறகு மேற்கண்ட பத்து செயல்களை செய்யாமல் இருந்தாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.