சமூக மதிப்போடு வாழ கடைபிடிக்க வேண்டிய 12 நெறிமுறைகள்!

Social respect
Social respect
Published on

1. நம் கண் முன்னே நம்மைப் புகழ்ந்து பேசுபவர்களிடம் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. இறை வழிபாடுகளே நம்மை அமோகமாக வாழ வைக்கும்!

2. நம்மைப் போக விட்டு நமது முதுகிற்குப் பின்னால் புறம் பேசும் நபர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பதே நல்லது.

3. பிறருக்கு அறிவுரை சொல்வது எளிது. அதற்கு முன்பு அதற்கு நாம்  தகுதியானவர்கள்தானா என சுய பரிசோதனை செய்வது நல்லது!

4. தானத்தில் சிறந்தது அன்னதானம் மட்டுமல்ல, நிதானமும்தான். அதை கடைபிடிப்பதே சிறப்பு!

5. அடுத்தவர் குடும்ப விஷயங்களில் நாம் கூடுமான வரையில் தலையிடாமல் இருப்பதே உயர்வான நாகரிகம்!

இதையும் படியுங்கள்:
பணியிடத்தில் உங்களை நிரூபிக்காமல் பிறர் மதிப்பை சம்பாதிக்க சாணக்கிய நீதி சொல்லும் 6 வழிகள்!
Social respect

6. வாழ்ந்து கெட்டவர்களையும், நம்மை விட வசதி குறைவானவர்களையும் எள்ளி நகையாடுவது தவறான செயல். அது நல்லதல்ல!

7. நமது கருத்துகள் நமக்குப் பிடித்தவையாக இருக்கலாம். அதற்காக அதை அடுத்தவர்களிடம் திணிக்க வேண்டாம் அது நல்ல விஷயமே அல்ல!

8. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. நாம் கொடுத்துப் பெறுவது. நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும் மரியாதையே நமக்குத் திரும்பவும் வரும்.

9. நீங்களே பேசிக்கொண்டிருக்காதீா்கள். எதிர் தரப்பில் பேசும் நபர்களுக்கும், பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்!

10. உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதற்காக சில வகை பலகாரங்களை நீங்கள் மட்டுமே சாப்பிட வேண்டாம். அனைவரும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள்!

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்க மணி பிளாண்டை இந்த திசையில் வளர்ப்பது நல்லது!
Social respect

11. பொதுவில் அமர்ந்து உணவருந்தும் நிலையில் சமையலில் டேஸ்ட் குறைவாகவோ, உப்பு, காரம் சரியில்லாத நிலையில்அதன் விபரத்தை தனியாகக் கூப்பிட்டு பதமாக எடுத்துச் சொல்லுங்கள். அதுவே நாகரிகம்.

12. தாயிடம் அன்பாய்ப் பேசுங்கள், தந்தையிடம் அரவணைப்போடு பேசுங்கள், ஆசிரியரிடம் அளவோடு பேசுங்கள், நண்பனிடம் நயவஞ்சகம் தவிர்த்துப் பேசுங்கள், தெய்வத்துடன் மெளனமாகப் பேசுங்கள்.

இந்த ஒரு டஜன் வாக்கியங்களை தவறாமல் வாழ்க்கையில் கடைபிடியுங்கள்! மனதில் நோ்மறை சிந்தனையோடு வாழ்ந்தால் அனைத்துமே நம் வசமாகும். வாழ்வில் வசந்தம் ஒருபோதும் நம்மை விட்டு விலகவே விலகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com