பணியிடத்தில் உங்களை நிரூபிக்காமல் பிறர் மதிப்பை சம்பாதிக்க சாணக்கிய நீதி சொல்லும் 6 வழிகள்!

Chanakya Justice
Chanakya Justice
Published on

‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலை எழுதியவரும் இந்தியாவின் சிறந்த தத்துவ ஞானியுமான சாணக்கியர் பணியிடத்தில் பிறருடைய மரியாதையை, மதிப்பை சம்பாதிப்பது எப்படி என்று சொல்கிறார். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அறிவிப்பை விட அமைதியே சிறந்தது: ‘நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை வெளியில் சொல்லாதே. ரகசியமாய் வைத்து அதை செயல்படுத்துவதில் உறுதியாய் இரு’ என்கிறார் சாணக்கியர். அலுவலகத்தில் வேலைகளை ஒவ்வொரு கட்டத்திலும், ‘நான் இதை செய்து விட்டேன், அதைச் செய்து விட்டேன்’ என்று சொல்லாமல் முழுமையாக வேலை முடிந்த பிறகு சொல்லுங்கள்.

2. பிறரை மகிழ்விப்பது போல பேச வேண்டியதில்லை: ‘எத்தனை புத்திசாலித்தனமாகப் பேசினாலும் அது யாரோ ஒருவருக்குப் பிடிக்காது. சிலர் பாராட்டலாம், சிலர் அதைப் பற்றிய அதிருப்தியை வெளியிடலாம். ஞானத்தையும் பகுத்தறிவையும் பயன்படுத்தி குறைவாகப் பேச வேண்டும். பிறரை மகிழ்விப்பதற்காக பேச வேண்டியது இல்லை. தேவையான நேரத்தில் மௌனத்தை கடைபிடிக்கலாம்’ என்கிறார் சாணக்கியர்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்க மணி பிளாண்டை இந்த திசையில் வளர்ப்பது நல்லது!
Chanakya Justice

3. நற்குணத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: ‘ஒரு பூ அழகாக பூக்கிறது. அதேசமயத்தில் தன்னுடைய நறுமணத்தை வெளிப்படுத்த அது முயற்சி செய்வதில்லை. அதை நாடி செல்பவர்களுக்கு நறுமணம் தருகிறது. அதுபோல உங்களுடைய வேலை, முயற்சி, விரிவுரைகள் போன்றவை உண்மையானதாக இருக்கும். பிறர் அதைப் பார்த்து பாராட்ட வேண்டும் என்கிற அங்கீகாரத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.’

4. ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள்: ‘ஒரு வேலையை செய்யத் தொடங்கும் முன்பு, நான் ஏன் அதை செய்கிறேன்? அதன் முடிவுகள் என்னவாக இருக்கும்? நான் வெற்றி பெறுவேனா? என்ற மூன்று கேள்விகளை கேட்டுக்கொண்டு ஆழமாக சிந்தித்து அதற்கு திருப்தியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அதை செய்யுங்கள். வேலைக்குப் புதியவர், இளையவர், அமைதியானவர் என்பதற்காக அத்தனை வேலைகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். அதனால் எந்த மரியாதையும் கிடைக்காது. பிறர் உங்களை அதிகாரம் செய்யத்தான் நினைப்பார்கள்.’

இதையும் படியுங்கள்:
காதலை வெற்றி பெறச் செய்யும் காரணக் கருவி எது தெரியுமா?
Chanakya Justice

5. தேவையானதை மட்டும் செய்யுங்கள்: ‘ஒரு வேலைக்காரனை அவன் கடமையை செய்யும்போது சோதித்துப் பார்; உறவினரை கஷ்டத்தில் சோதித்து பார்; நண்பனை கஷ்டத்தில் அறியலாம். மனைவியை துரதிஷ்டத்தில் சோதித்துப் பார்க்கலாம்’ என்கிறார் சாணக்கியர். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் நீங்கள் யார் என்பதற்காக உங்களை மதிப்பதில்லை. சிலர் உங்களால் என்ன பயன் என்று மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.

6. பிறர் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்: ‘அத்தனை வேலையிலும் பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் உண்மையாக திறமையை வெளிப்படுத்தி வேலை செய்யும்போது உங்களுக்கான மரியாதை தானாகவே கிடைக்கும். பிறருடைய ஒப்புதல் அல்லது நிராகரிப்பால் ஒருபோதும் மனதை தளர விடக் கூடாது. உங்களுடைய பகுத்தறிவில் இருந்து மரியாதையை பெறுபவராக இருக்க வேண்டும்’ என்கிறார் சாணக்கியர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com