ஒவ்வொருவரும் அவரவர் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் 40 வயதிற்கு மேற்பட்டோ தமது உடலை மிகவும் கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட்டு பலவித நோய்களுக்கு வழிவகுத்து நிம்மதியை குலைத்து விடும். அந்த வகையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வெந்தயம்: கீரையை விட நார்ச்சத்து வெந்தயத்தில் அதிகம் உள்ளது. கரையாத நார்களை கரைத்து மலத்தை வெளியேற்ற உதவுவதோடு நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னை ஏற்படாமல் பாதுகாப்பதில் வெந்தயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும், வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை இருதய பிரச்னை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
வெந்தயத்தை தினமும் ஊறவைத்தும் சாப்பிடலாம். அல்லது அப்படியே மென்றும் விழுங்கலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் டயட்டில் ஏதாவது ஒரு முறையில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
2. சின்ன வெங்காயம்: பச்சையாக சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. தினமும் தயிருடன் சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். சின்ன வெங்காயத்தில் பாலிஃபினால்ஸ் அதிகம் உள்ளதோடு, அதிக பயோடிக் தன்மை உண்டு. அதனால் மூல நோய், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய்க்கு எதிர்ப்பு பண்புகள் வராமல் தடுப்பதோடு, மூட்டு வலிக்கும் சிறந்த வைத்தியமாக இருக்கும்.
3. வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டை வெந்நீரில் மசித்து அப்படியே அப்படியே சாப்பிடலாம். அல்லது நாம் சமைக்கும் அன்றாட உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக மட்டும் உட்கொள்ளக் கூடாது.
மருந்து மாத்திரைகளை எடுத்து நோயை குணப்படுத்துவதை விட ‘வருமுன் காப்போம்’ என்ற நோக்கில் ஒவ்வொருவரும் அவரவர் சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவோமேயானால் எந்த வயதிலும் ஆரோக்கியத்திற்கு குறையே இருக்காது.