குழந்தைகளுக்கு சிறு வயதில் பெற்றோரின் வார்த்தைகள்தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஐந்து வயது வரை அவர்களுக்கு அன்பு மற்றும் உத்வேகம் தரும் வார்த்தைகளைச் சொன்னால் அவர்கள் விரைவில் அதைக் கற்றுக்கொண்டு நன்றாக வளருவதோடு, பெற்றோர்களுடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். அந்த வகையில், குழந்தைகள் பெற்றோர்களிடம் அதிகம் எதிர்பார்க்கும் மூன்று வார்த்தைகள் குறித்து இந்தப் பதியில் காண்போம்.
1. ‘நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’: ஒவ்வொரு பிள்ளையும் தங்கள் பெற்றோர் தான் எப்படி இருந்தாலும் அப்படியே நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்றொருவரைப் போல இல்லை என்று உணரக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் குழந்தைகளிடம் பெற்றோர். ‘நீதான் எனக்கு ஸ்பெஷல்’ என்ற வார்த்தையை சொல்ல வேண்டும்.
இந்த வார்த்தைகள் மூலம் பிள்ளைக்கு, ‘தான்தான் பெற்றோருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர், மதிப்புமிக்கவர்’ என்று தோன்றும். இந்த வார்த்தைகள் பிள்ளைகளின் தன்னம்பிக்கை, சுயமரியாதையை அதிகரித்து எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை அவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள மிகவும் தேவைப்படுகிறது.
2. ‘நீ சிறந்தவன்’: பல நேரங்களில் பிள்ளைகள் தாங்கள் சிறந்தவர்கள் இல்லை, தாம் எதற்கும் லாயக்கு இல்லை என்பதை உணர்கிறார்கள். இது பெரும்பாலும் சமூக ஒப்பீடுகளால், அதாவது நம் பிள்ளைகளை அவர்களின் உடன்பிறந்தவர்களுடன், நண்பர்களுடன், மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது, தெரியாமலேயே அவர்களுக்கு ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம். இதற்கு நாம் நம் குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாமல், அவர்களே சிறந்தவர்கள் என்பதை அவர்களிடம் அடிக்கடி தெரிவிக்க வேண்டும்.
3. ஒப்பீடுகளுக்கு அப்பால் எப்படி இருக்க வேண்டும்?: தனித்துவமான ஒரு அரிய பொக்கிஷமாக உங்கள் குழந்தைகளைப் பாருங்கள். ஒவ்வொரு பிள்ளையிலும் வெவ்வேறு திறமைகள், குணங்கள் தனித்தன்மைகள், பலன்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
பிள்ளைகள் எப்போதும் ‘முழுமையாக’ இருப்பார்கள் என்று எதிர்பார்க்காமல் தவறுகள் செய்தால் அது இயல்புதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் பிள்ளைக்கு மனப் பாதுகாப்பை அளிப்பதோடு, இதனால் அவர்கள் தங்கள் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள்.
மேற்கூறிய மூன்று வார்த்தைகளையும் குழந்தைகளிடம் அடிக்கடி கூறினால் அவர்கள் அதை கண்டிப்பாக விரும்புவதோடு, மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள்.