ஆயுட்காலத்தை விரைவாகக் குறைக்கும் 6 வகை உணவுகள்!

Foods that shorten life expectancy!
Foods that shorten life expectancy!
Published on

‘உணவே மருந்து’ என்பது நம் முன்னோர் வாக்கு. பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகள் நம் உடலைப் பாதுகாத்தாலும், சில உணவுகள் நம் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளை குறைக்கும் ஆறு உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சமைப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை நைட்ரேட்டுகளுடன் பாதுகாக்கப்படுவதால், பெருங்குடல் புற்று நோய்க்கான ஆபத்தாகக் கருதப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்புகளும் சோடியமும் அதிகமாக இருப்பதால், இது இதய நோய், இறப்பு விகிதம், புற்றுநோய் ஆபத்து மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2. சர்க்கரை பானங்கள்: குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்களில் அதிகமாக சர்க்கரை சேர்க்கப்படுவதால், உடலுக்கு பிரச்னையை உருவாக்குகின்றன. ஏனெனில், அதிகப்படியான சர்க்கரை நுகர்வு எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் கல்லீரல் பிரச்னையை அதிகரிக்கும். இதற்கு பதிலாக, உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பானங்களைத் தேர்வு செய்து பருக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள்!
Foods that shorten life expectancy!

3. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்: வெள்ளை பிரெட், வெள்ளை அரிசி மற்றும் பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மிகவும் பதப்படுத்தப்பட்டுள்ளதால், அதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அகற்றப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து குறைபாடு விரைவான இரத்த சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தி காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்து ஆயுளைக் குறைக்கின்றன.

4. வறுத்த உணவுகள்: ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிரஞ்சு ஃப்ரைஸ், வறுத்த கோழி போன்ற வறுத்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள எண்ணெய்களில் சமைக்கப்படுகின்றன. அவை கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி  நல்ல கொழுப்பை குறைப்பதால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. வறுத்த உணவுகளை வழக்கமாக உட்கொள்வது, குறிப்பாக பெண்களில் ஆரம்பகால மரணமடையும் ஆபத்துடன் தொடர்புடையது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

5. பாக்கெட் தின்பண்டங்கள்: சிப்ஸ் மற்றும் பிற பாக்கெட் தின்பண்டங்கள் பதப்படுத்தப்படுவதற்கு ஆரோக்கியமற்ற சேர்க்கைகள், ரசாயனங்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன. அதிக சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இந்த தின்பண்டங்களை சாப்பிடுதற்கு பதிலாக, நட்ஸ், விதைகள் அல்லது பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
யாகத்தின் அறிவியல் நன்மைகள் என்ன தெரியுமா?
Foods that shorten life expectancy!

6. செயற்கை இனிப்பூட்டிகள்: செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்கு ‘ஆரோக்கியமான’ மாற்றாக இருந்தாலும் சாக்கரின் போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் இயல்பாகவே அபாயங்களைக் கொண்டிருக்கிறது. இந்த இனிப்புகள் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து சர்க்கரை உணவுகளுக்கான ஆசையைத் தூண்டும் என்று சொல்லப்படுவதால் ஆயுளைக் குறைக்கும் உணவாகக் கருதப்படுகிறது.

மேற்கூறிய ஆறு உணவு வகைகளுமே ஆயுளைக் குறைக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com