மழைக்காலத்தில் இரும்புப் பாத்திரங்களை பாதுகாக்க இந்த 4 வழிகள் போதும்!

தோசைக்கல்லில் உள்ள துருவை நீக்கி, நான்-ஸ்டிக் போல மாற்றும் அருமையான டிப்ஸ்.
இரும்புப் பாத்திரங்கள்
இரும்புப் பாத்திரங்கள் Gemini image
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இரும்புத் தோசைக்கல் மற்றும் கடாய் எளிதில் துருப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதமும், ஆக்சிஜனும் இரும்புடன் வினைபுரிவதால் இந்த துரு உருவாகிறது. இரும்பு பாத்திரங்களை ஈரம் தாக்காமல் பாதுகாக்கவும், ஏற்கனவே உள்ள துருவை நீங்கிச் சரி செய்யவும் 4 எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

1. பயன்பாட்டிற்குப் பிறகு ஈரம் இல்லாமல் உலர்த்துதல்: 

சமைத்த பின் அல்லது கழுவிய பிறகு இரும்புக்கல்லில் சிறிது ஈரம் தங்கி இருந்தாலும் மழைக் காலத்தில் அது உடனடியாக துருவாக மாறிவிடும். அதை தடுக்க தோசைக்கல்லை பயன்படுத்தி முடித்ததும் ஒரு காட்டன் துணி அல்லது திசு பேப்பர் வைத்து அதிலிருக்கும் எண்ணெயை துடைத்து விடவும். மேலும் கடாய் போன்ற பாத்திரத்தைக் கழுவியவுடன் உடனடியாகத் துணியால் துடைத்துவிட்டு, அடுப்பில் மிதமான தீயில் 1 நிமிடம் சூடாக்கவும். அதில் உள்ள முழு ஈரமும் ஆவியாகி விட்டதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பல ஆண்டுகள் உழைக்கும் மழைக்கோட்! உடமைகளைப் பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!
இரும்புப் பாத்திரங்கள்

2. எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கொண்டு துருவை நீக்குதல்: 

ஏற்கனவே துருப்பிடித்திருந்தால், கவலைப்பட வேண்டாம் பாத்திரம் வீணாகப் போகாது. துரு பிடித்த பகுதியின் மீது பேக்கிங் சோடா தூவி, பாதியளவு வெட்டிய எலுமிச்சைப் பழத்தால் தேய்க்கவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் பேக்கிங் சோடாவின் உராய்வுத் தன்மை துருவை எளிதில் அகற்றிவிடும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, உடனடியாகத் துடைத்து எண்ணெய் தடவி வைக்கவும்.

இரும்புப் பாத்திரங்கள்
இரும்புப் பாத்திரங்கள் Gemini image

3. சிலிக்கா ஜெல் பேக்குகள்: 

நாம் ஏதேனும் புதுப்பொருட்கள் வாங்கினால் அதனுள் சின்னதாக ஒரு பாக்கெட் வைத்திருப்பார்கள். அதன் பயன்பாடு தெரியாமல், பல நேரங்களில் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். அது தான் சிலிக்கா ஜெல் பாக்கெட், இவை உலர்விப்பானாக செயல்படுகிறது. மழைக்காலத்தில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை ரேக்குகளில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதால் ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, மற்றும் கடலூர் மக்களுக்கான மழைக்கால வீட்டுப் பராமரிப்பு டிப்ஸ்!
இரும்புப் பாத்திரங்கள்

4. காய்ந்த இடத்தில் சேமித்து வைத்தல்: 

மழைக்காலத்தில் சமையலறை அலமாரிகளிலும் ஈரப்பதம் தங்கக்கூடும். அதனால் இரும்புப் பாத்திரங்களை நேரடியாகக் குளிர்ந்த அல்லது ஈரமான தரைப்பகுதிகளில் வைக்காமல், காற்றோட்டமான காய்ந்த இடத்தில் சேமிக்கவும். பாத்திரங்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைப்பதாக இருந்தால், நடுவில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய துணியை வைத்துப் பாதுகாக்கலாம்.

மழைக்காலம் என்பது இரும்புப் பாத்திரங்களின் ஆயுளைக் குறைக்கும் காலமல்ல; மாறாக, சற்று கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டிய பருவமாகும். நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளுக்கு இரும்புத் தோசைக்கல்லும் கடாயும் ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசியமான பங்களிப்பை வழங்குகின்றன. ஈரப்பதம் தான் இரும்பின் முதல் எதிரி என்பதால், நீர் தங்காமல் பார்த்துக் கொண்டாலே தோசைக்கல்லைப் பல தலைமுறைகளுக்குத் துருவின்றி, ஒட்டாமல் வரும் நான்-ஸ்டிக் கல்லாகப் பயன்படுத்த முடியும்.

இரும்புப் பாத்திரங்கள் பராமரிப்பு குறித்த தெளிவான, நம்பகமான 4 நடைமுறை வழிமுறைகளைத் துல்லியமாகப் பெற்றுப் பயனடைகிறார்கள்.