திருமண வாழ்க்கை சிறக்க 40 வழிகள்!

திருமண வாழ்க்கை சிறக்க 40 வழிகள்!
மங்கையர் மலர்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

* ஒவ்வொரு நாளையும் முத்தத்துடன் தொடங்கு.

* 'நமது பாட்டு’ என்று ஏதாவது ஒரு பாட்டைத் தேர்ந்தெடு.

* பாஸிட்டிவ் கனவுகளைப் பற்றிப் பேசு.

* ''நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று அடிக்கடி சொல்.

* தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக்கொள்.

* ஒவ்வொரு திருமண நாள் மற்றும் காதலர் தினத்துக்கு பூக்கள் அனுப்பு.

* நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

* சொல்வதை காது கொடுத்துக் கேள்.

* எப்போதும் ‘ப்ளிச்’ என்றிரு.

* மரியாதை கொடு.

* மனம்விட்டுச் சிரி.

* அவசரப்படாதே.

* இல்லறத்தில் உண்மையாக இரு.

* நல்ல நடத்தையுடன் இரு.

* வித்தியாசங்களை ஏற்றுக்கொள்.

* ஒளிவு மறைவு வேண்டாம்.

* கஷ்டங்களை ஏற்க திடமாக இரு.

* தேவையான சுதந்திரத்தைக் கொடு.

* தோல்வியின்போது தைரியம் கொடு.

* பிறந்த தினங்களைப் பெரிய அளவில் கொண்டாடு.

* தினம் இரண்டு தடவையாவது பாராட்டு.

* காலை உணவை அவன் அல்லது அவளுக்காகப் பரிமாறு.

* அவ்வப்போது ஃபோன் செய்து பேசு.

* அன்பை வெளிப்படுத்தக் கூடிய இடங்களுக்கு அழைத்துச்செல்.

* வாரம் ஒரு முறை வெளியில்  அழைத்துச் செல்.

* “உன்னை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேள்.

* அவன் அல்லது அவளுக்காக தினமும் பிரார்த்தனை செய்.

* அவன் அல்லது அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடு.

* அவன் அல்லது அவளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மரியாதையுடன் நடத்து.

* அவன் அல்லது அவளின் தேவையை உடனுக்குடன் கவனி.

* அவன் அல்லது அவள் கேட்கும் முன் குறிப்பறிந்து செயல்படு.

* அவன் அல்லது அவளின் வழியைக் கடைப்பிடி.

* அலுவலகப் பணியை வீட்டுக்குக் கொண்டு வராதே!

* வருடம் ஒருமுறை வெளியூர் பயணம் அழைத்துச் செல்.

* நானிருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டு.

* தேவைப்படும்பொழுது பிறரின் உதவியை நாடு.

* ஒவ்வொரு நாளையும் கட்டி அணைப்பதுடன் நிறைவு செய்.

* விட்டுக்கொடுப்பது அவசியம்.

* வாக்குவாதம் தவிர்க்கவும்.

* சிறு செலவுகள் ஆயினும் ஆலோசித்து செய்வது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com