நம் உடலுக்கு பலவிதத்திலும் நன்மை தருவது பழங்கள். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு நன்மைகள்உள்ளது. எந்த ஒரு வியாதிக்கும் பழம் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதில்லை. டாக்டர்கள் கூறுவது முதலில் பழம் சாப்பிடுங்கள், ஏனென்றால் அதில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன. அவை நமக்கு நேரடியாக கிடைக்கிறது. ஆனாலும், சில பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். எந்தப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரிந்து சாப்பிட்டாலே போதும், நம் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது. இரவு நேரத்தில் உறங்கப் போவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 பழங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லக்கூடிய ஆரஞ்சு, திராட்சை பழங்கள், எலுமிச்சை மற்றும் பிற அமிலத்தன்மை கொண்ட பழங்களை இரவு நேரத்தில், குறிப்பாக தூங்கப்போகும் முன்பாக சாப்பிடக்கூடாது. இந்தப் பழங்களை சாப்பிட்ட உடனே தூங்கப்போனால், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், தூக்கத்தில் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் நமது வயிற்றில் செரிமானக் கோளாறை ஏற்படுத்துமாம்.
2. அண்ணாச்சிபழம்: அண்ணாச்சி பழத்தில் ப்ரோம்லைன் எனப்படும் நொதி உள்ளது. இது ஜீரணத்திற்கு உதவும். சில நேரங்களில் அதிக அளவு இந்தப் பழங்களை சாப்பிட்டாலோ அல்லது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்கப்போகும் முன்பாக அண்ணாசி பழத்தை சாப்பிடுவது செரிமான பிரச்னை, வாயு பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தும். ப்ரோம்லைன் நொதி, இரைப்பையில் அதிக அமிலத்தை சுரக்க வைத்து வயிறு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
3. தர்ப்பூசணி: வெயில் காலத்தில் சந்தையில் அதிகம் காணப்படும் பழம் தர்பூசணி. சாலையோரங்களில் கூட அதிக அளவில் தர்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருப்பதைக் காண முடியும். நீர்ச்சத்து மிக்க இந்தப் பழங்கள் வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க மிகவும் நல்லது. அதே நேரத்தில், இந்தப் பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில், இரவில் இப்பழத்தை சாப்பிட்டால் வயிறு உப்புசம், அசௌகரியம் ஆகியவை ஏற்படும். குறிப்பாக, அதிகமாக சாப்பிட்டால் இதுபோன்ற பிரச்னைகள் வரலாம். இந்தப் பழத்தில் அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரை சத்து உள்ளதால் ஜீரணமாக நமது உடல் போராடும்.
4. மாம்பழங்கள்: கோடைக்காலத்தில் கிடைக்கும் சுவைமிக்க பழங்களில் ஒன்று மாம்பழம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சுவை மட்டுமின்றி, சத்து மிக்கது. இருந்தாலும் இரவு தூங்கும் முன்பாக மாம்பழத்தை சாப்பிடுவது நமது உடலில் சர்க்கரை அளவு வேகமாக கூட்ட வழிவகுக்கும். மேலும், தூக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மாம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இரவில் சாப்பிடும் போது ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
5. வழைப்பழங்கள்: பழங்கள் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது வாழைப்பழங்களாகத்தான் இருக்கும். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சுவைமிக்கது மட்டுமின்றி, அதிக சத்து நிறைந்தது. விலையும் மலிவு என்பதோடு அனைத்து சீசன்களிலும் கிடைக்கக்கூடிய இந்தப் பழங்கள் நாள்தோறும் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது.