
கழிவறையைச் சுத்தம் செய்வது ஒரு பகுதிதான். ஆனால், அதற்குள் நுழையும்போது ஒரு நிம்மதியான, புத்துணர்ச்சியூட்டும் உணர்வு வரவேண்டும் என்றால், வாசனைதான் மிக முக்கியம். உங்களின் தனிப்பட்ட ஓய்வு இடமாக (Personal Retreat) பாத்ரூமை மாற்ற, செலவு குறைந்த, அதே சமயம், அசத்தலான 5 வழிகளைப் பற்றி பார்ப்போம்.
1. பேக்கிங் சோடா:
உங்கள் பாத்ரூம் துர்நாற்றத்தை நீக்குவதில் பேக்கிங் சோடா ஒரு சாம்பியன். இது ஒரு இயற்கையான வாசனை நீக்கி (Natural Deodoriser), துர்நாற்றத்தை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது.
ஒரு சிறிய திறந்த கொள்கலனில் (Open Container) பேக்கிங் சோடாவை நிரப்பி, அதை மறைவான மூலையில் சின்ங் அடியிலோ அல்லது டாய்லெட்டின் பின்னாலோ வைத்துவிடுங்கள். இது மிகவும் மலிவான, ஆனால் நிச்சயமாக பலன் தரும் பொருள்.
2. சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை துண்டுகள் அல்லது ஆரஞ்சு தோல்களை பாத்ரூமில் வைத்துப் பாருங்கள்.
இந்த பழங்கள் அற்புதமான வாசனையை அளிப்பதுடன், காற்றைச் சுத்திகரிக்கவும் (Purify the air) உதவுகின்றன. எந்தவித செயற்கை ஸ்ப்ரேயும் இல்லாமல், உங்கள் பாத்ரூம் உடனடியாகப் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் மாறிவிடும்.
3. இன்டோர் தாவரங்களும், பூக்களும்:
சிறிய உட்புறத் தாவரங்கள் (Indoor Plants) அல்லது ஃபிரெஷ்ஷான பூக்களை பாத்ரூமில் வைப்பதன் மூலம் உங்கள் பாத்ரூம் நறுமணத்துடனும், புத்துணர்வுடனும், அமைதியுடனும் இருக்கும்.
பீஸ் லில்லி (Peace Lily) அல்லது ஃபெர்ன் (Fern) போன்ற தாவரங்கள் குளியலறையின் ஈரப்பதத்தை விரும்புகின்றன. இவை இயல்பாகவே காற்றைச் சுத்திகரிக்கின்றன. ஒரு சிறிய பூ ஜாடியில் மல்லிகை அல்லது கார்டெனியா பூக்களை வைத்தால், அது உங்கள் பாத்ரூமுக்கு நுட்பமான, அழகான, உயிரோட்டமுள்ள வாசனையைச் சேர்க்கும்.
4. நறுமணம் கொண்ட டாய்லெட் பொருட்கள்:
நீங்கள் பயன்படுத்தும் சோப்புகள், ஷாம்பூக்கள் மற்றும் லோஷன்கள் புத்துணர்ச்சியூட்டும் புதினா (Mint) அல்லது சிட்ரஸ் வாசனை கொண்டதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் துண்டுகள் (Towels) மற்றும் பாத் மேட்கள் எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்தும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சிறிய விஷயங்கள் இணைந்து உங்கள் இடத்துக்கு இயற்கையான, கவர்ச்சிகரமான நறுமணத்தை அளிக்கின்றன.
5. அத்தியாவசிய எண்ணெய்கள்:
உங்கள் பாத்ரூமை ஒரு ஸ்பா (Spa) போல உணரவைக்க, ஒரு டிஃப்யூசர் (Diffuser) மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் (Essential Oils) போதும். லாவெண்டர் அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்கள் அமைதியான, புதிய வாசனையைத் தரும்.
டிஃப்யூசர் இல்லையா? கவலை வேண்டாம்! ஒரு சிறிய பஞ்சில் (Cotton Ball) சில துளிகள் அத்தியாவசிய எண்ணெயைத் தெளித்து, அதை டாய்லெட்டுக்கு பின்னால் மறைத்து வையுங்கள். இது மெதுவாக அறையை ஒரு இனிமையான நறுமணத்தால் நிரப்பும்.
உங்கள் பாத்ரூமை இந்த எளிய 5 வழிகளில் பராமரிப்பதன் மூலம், நீங்கள் அதிக பணம் செலவழிக்காமல் நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியான வாசனையைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.