
இப்போதெல்லாம் உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் போவதற்கு முன்பு கூகுளிடம் தான் முதலில் போகிறோம். தற்போது உள்ள காலக்கட்டத்தில், மக்கள் சோஷியல் மீடியாவில் தான் நிறைய விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார்கள். இதில் நிறைய நல்ல விஷயங்களும் இருக்கிறது, கெட்ட விஷயங்களும் இருக்கிறது. நாம் இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த Myth பற்றி அறிவியல் சொல்லும் உண்மை என்னவென்று தெரிந்துக் கொள்வோம்.
1. ஊதுபத்தி புகையை சுவாசிக்கும் போது கேன்சர் வருவதாக சொல்லப்படுவது உண்மையா? என்று கேட்டால், வீட்டில் ஊதுபத்தி ஏற்றி வைப்பதனால் கேன்சர் வராது. அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ஊதுபத்தியினால் அதிக புகை மூட்டம் வந்தால், அதையும் நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, காற்றோட்டம் இருக்கும் இடத்தில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது நல்லது.
2. இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை. தாமதமாக இரவு சாப்பிடுவதால் உடல் எடைக் கூடாது. எந்த அளவு கலோரிஸை (Calories) எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்து தான் உடல் எடை கூடுவதும், குறைவதும் இருக்கிறது. Type 2 diabetics, hormone rhythm மாறும், Sleep quality பாதிக்கப்படும். இதுப்போன்ற பிரச்னைகள் இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும்.
3. சுடுத்தண்ணீர் குடிப்பதால் கொழுப்பு கரையும் என்று சொல்வது உண்மையா? சாப்பிட்ட பிறகு சுடுத்தண்ணீர் குடித்தால் அது நம் ஜீரணத்திற்கு உதவுமே தவிர நேரடியாக எந்த விதத்திலும் Fat loss-க்கு உதவாது. இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். பொதுவாக சாப்பிடும் முன்பு சுடுத்தண்ணீர் எடுத்துக் கொண்டால், உணவு அதிகமாக உட்கொள்ள மாட்டோம். இதன் மூலமாக உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறதே தவிர நேரடியாக சுடுத்தண்ணீர் குடிப்பதன் மூலமாக உடல் கொழுப்பை கரைக்க முடியாது.
4. முட்டையில் உள்ள மஞ்சள் கருவை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து ஹார்ட் அட்டாக் வருமா? என்று கேட்டால், முட்டையில் 1.5 கிராம் தான் Saturated fats இருக்கிறது என்று கண்டுப்பிடித்துள்ளனர். ஒரு நாள் ஒரு முட்டையை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஜிம் போகிறவர்கள் 2 அல்லது 3 முட்டைகள் கூட எடுத்துக் கொள்ளலாம். இதில் எப்போது பிரச்சனை வருகிறதென்றால், முட்டை சாப்பிடும் போது எண்ணெய், பட்டர் போன்றவற்றை பயன்படுத்தி சாப்பிடும் போதே கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
5. தயிரையும் மீனையும் சேர்த்து சாப்பிட்டால் உடல் முழுவதும் வெண் புள்ளிகள் வந்துவிடும் என்று சொல்வது உண்மையா? என்று கேட்டால், வெண் புள்ளிகள் இதனால் தான் வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. வெண் புள்ளிகள் நம் உடலில் வருவதற்கான காரணம் Auto immune disease ஆகும். நம் உடலில் இருக்கும் Immunity system நிறம் தரக்கூடிய Melanocytes ஐ இதுவே அழித்துவிடும். இதனால் தான் Vitiligo என்ற நோய் ஏற்படுகிறது.
6. தலை ஈரமாக இருந்தால் ஜூரம் வந்துவிடும் என்று சொல்வது உண்மையா? ஜூரம் என்பது, Rhino virus or influenza virus ஆல் வருகிறது. ஆனால், தலை ஈரமாக இருக்கும் சமயம் குளிர்காற்று அடிக்கும் போது நம் மூக்கில் உள்ள Nerves ரொம்ப சென்சிட்டிவாக இருக்கும். அதனால் தும்மல் ஏற்படும். சிலருக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கும் அவர்கள் தண்ணீரில் நனைந்தாலே தும்மல் வரும். இதுவே உண்மையான காரணம்.
இந்த பதிவில் நாம் இத்தனை நாட்களாக உண்மை என்று நம்பிக்கொண்டிருந்த பொய்யான விஷயங்களைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொண்டோம். இனி இதே தவறுகளை தொடர்ந்து செய்யாமல் தவிர்ப்பது நல்லது.