எந்தக் கல்லூரியும் சொல்லித் தராத 5 வாழ்க்கைப் பாடங்கள்!

College life lesson
College life lessonhttps://eluthu.com

ல்லூரி காலம் என்றாலே கண்களின் நீர்த்துளியுடன் கனாக் காணும் காலமாக இன்றும் என்றும் மாறிவிடும். அப்படிப்பட்ட கல்லூரியின் அனுபவத்தைத் தரத் திரைப்படங்களும் சில வந்துள்ளன. அந்தக் கல்லூரி பருவங்களில் ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களைக் காட்டிலும் நாமாகக் கற்றுக்கொள்ளும் சில பாடங்கள் உள்ளன. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கடினமானவற்றைத் தேர்ந்தெடுத்தல்: நாம் எல்லோரும், ‘ரிஸ்க் எடுப்பது என்றால் ரஸ்க் சாப்பிடுவது போல்’ என்று எளிமையாகச் சொல்லிக்கொள்வோம். ஆனால், அதை ஒரு நாளும் வாழ்வில் செயல்படுத்திப் பார்க்க மாட்டோம். அப்படி ரிஸ்க் எடுப்பதற்குச் சரியான பருவம் என்றால் அது கல்லூரி பருவம்தான். அந்தக் காலகட்டத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு கடினமான செயலும் பெரிதாகத் தெரியாது. அதனால் வரக்கூடிய லாபமும் நட்டமும் நம்மை அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்.

2. தொடர்பு திறன்: கல்லூரி பருவத்தில் உங்களுக்குப் பிடித்த மாணவரிடம் பேசுவதற்காகச் செலவிடும் நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு 5 சதவிகிதத்தை உங்களைச் சுற்றியுள்ள சக நண்பர்களுடன் செலவிட்டால் உங்கள் தொடர்பு திறன் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கை நல்ல பாதையில் செல்ல வழிவகுக்கும்.

3. வாசித்தல்: வாசிப்பு என்பது மனிதனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பெரும்பான்மையான வெற்றியாளர்கள் அனைவரும் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அதனால் உங்களுக்கு விருப்பமான நூல்களைப் படிக்கத் தொடங்குங்கள். அப்படிப் படிக்க விருப்பமே இல்லை என்றால் கையில் கிடைக்கும் நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்குங்கள். அப்படி ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்கு விருப்பமான பகுதி எதுவென்று தெரிந்து விடும்.

இதையும் படியுங்கள்:
மயக்கும் வாசம் வீசும் தாழம்பூவின் மருத்துவ குணங்கள்!
College life lesson

4. ஆரோக்கியம்: பெரிய பெரிய பணக்காரர்கள் கவலைப்படும் ஒரே விஷயம் தங்களின் உடல்நிலைதான். இளமையாக இருக்கும்பொழுதே உடலை வளமையாக வைத்துக்கொள்ளாமல், வயது முதிர்ந்த பிறகு உடல் நலத்தைப் பற்றிக் கவலை கொள்வது அறிவின்மையாகும். அதனால், இளமையாக இருக்கும்பொழுது உங்கள் உடல் நலத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் உணவுகளையும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். அது உங்களைப் பிற்காலத்தில் மகிழ்வுடன் வாழ வைக்கும்.

5. நல்ல நினைவுகளைச் சேகரித்தல்: கல்லூரி பருவத்தில் நண்பர்களுடன் வெளியில் செல்வது, விழாக்களில் பங்கு பெறுவது, விழாக்களை முன்னெடுத்துச் செய்வது, புகைப்படம் எடுப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை உங்கள் வாழ்வில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், அது உங்களை உற்சாகமாகவும், இன்பமாகவும், உங்கள் கல்லூரி பருவம் மட்டுமின்றி, வாழ்விலும் வைத்துக்கொள்ள உதவும்.

கண் மூடி திறப்பது போல் மறையும் கல்லூரி பருவத்தில், கல்லூரி கற்றுத் தராத இந்தப் பாடங்களை உங்கள் வாழ்வில் செயல்படுத்தினால் பிற்காலத்தில் நிச்சயம் நீங்கள் நல்ல நிலையில் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com