😳உங்க வீட்டை சுத்தி இந்த பொருளை பார்த்தா... உடனே ஓடிடுங்க! இல்லைனா பாம்பு உங்கள பாக்க வந்துரும்!

பாம்பு
பாம்பு
Published on

பாம்புகளைப் பொறுத்தவரைக்கும், அது ஒரு இடம் பாதுகாப்பானதுனு நினைச்சா அங்க வந்து தங்கும். அதுங்களுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம்தான் முக்கியம். இந்த மூணும் நம்ம வீட்டுக்குள்ள கிடைச்சா, அதுக்கு விருந்து வைக்கிற மாதிரிதான். அப்படி, நம்ம வீட்டுக்கு பக்கத்துல, பாம்புகளை ஈர்க்கும் அஞ்சு விஷயங்களைப் பத்தி இப்போ பார்ப்போம்.

1. வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற புதர்கள் மற்றும் செடிகள்: புதர் செடிகள் அதிகமா இருந்தா, பாம்புங்க அதுக்குள்ள பதுங்கிக்கொள்ளும். ஒருவேளை உங்க வீட்டு பக்கத்துல நிறைய செடிகள், புற்கள் இருந்தா, அது பாம்புகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமா இருக்கும். அதனால, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற புதர்கள், புற்கள்னு எல்லாத்தையும் அடிக்கடி சுத்தம் பண்ணி, வெட்டி வைக்கிறது ரொம்ப முக்கியம்.

2. வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பழைய பொருட்கள்: ஒருவேளை உங்க வீட்டு பக்கத்துல பழைய டயர்கள், மரம், செங்கல்னு ஏதாவது இருந்துச்சுனா, அது பாம்புங்களுக்கு ஒரு நல்ல இருப்பிடமா இருக்கும். அந்த பொருட்களுக்கு அடியிலயோ, இடுக்குலயோ பாம்புங்க பதுங்கிக்கொள்ளும். இது நம்ம வீட்டுக்குள்ள பாம்பு வரதுக்கு ஒரு காரணமா இருக்கும். அதனால, பழைய பொருட்கள், குப்பைகள்னு எல்லாத்தையும் ஒரு இடத்துல சேர்க்காம, சுத்தம் பண்ணி வைக்கிறது நல்லது.

3. கம்போஸ்ட் குவியல்கள் அல்லது குப்பைக் குவியல்கள்: நம்ம வீடுகள்ல காய்கறிகள், பழங்கள்னு எல்லாத்தையும் ஒரு இடத்துல சேர்த்து, அதை உரமாக மாத்துறதுக்கு கம்போஸ்ட் குவியல்களை வச்சிருப்போம். இந்த குவியல்கள்ல எலிகள், பூச்சிகள்னு நிறைய இருக்கும். இது பாம்புகளுக்கு ஒரு நல்ல உணவு. அதனால, இந்த கம்போஸ்ட் குவியல்கள், குப்பைக் குவியல்களை வீட்டுல இருந்து தூரமா வைக்கிறது நல்லது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; எலி கிலி மல்லி!
பாம்பு

4. எலிகள் மற்றும் பூச்சிகள்: எலிகள், பூச்சிகள்னு எந்த ஒரு உயிரினம் அதிகமா இருந்தாலும், அதை வேட்டையாட பாம்புகள் வரும். ஒருவேளை உங்க வீட்டுக்குள்ள எலிகள், பூச்சிகள்னு எது அதிகமா இருந்தா, அது பாம்புகளை ஈர்க்கும். அதனால, வீட்டுல எந்த ஒரு பூச்சியும் வராம பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்.

5. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள்: பாம்புகளுக்கு தண்ணீர் ரொம்பவே முக்கியம். அது தண்ணில குளிக்கும், தண்ணீர் குடிக்கும். ஒருவேளை உங்க வீட்டு பக்கத்துல தண்ணீர் தேங்கியுள்ள பகுதி, இல்லைனா குளங்கள், நீரோடைகள்னு எது இருந்தாலும், அது பாம்புகளுக்கு ஒரு வசதியான இடமா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜோக்ஸ்; அஞ்சு கலர் மாத்திரையைத் தந்து 50 ரூபாய் வாங்கிட்டாங்க!
பாம்பு

இந்த அஞ்சு விஷயங்களும் நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தா, அது பாம்புகளை ஈர்க்கும். இதுல இருந்து நாம எப்படி தப்பிக்கிறதுனு பார்த்தா, நம்ம வீட்டை சுத்தி உள்ள புதர்கள், புற்களை சுத்தம் செய்யணும். பழைய பொருட்களையும், குப்பைகளையும் உடனே நீக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தணும். எலிகள், பூச்சிகள் வராம பார்த்துக்கிறது ரொம்பவே முக்கியம். இந்த விஷயங்களை நாம சரி செஞ்சா, பாம்பு பயம் இல்லாம இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com