நாம் தினசரி மேற்கொள்ளும் விஷயங்கள் நம்மை அறியாமலேயே நம் வீட்டிற்குள் ஆற்றல் ஓட்டத்தை ஏற்படுத்தும். வாஸ்து தோஷத்தைப் போக்க வீட்டில் செய்ய வேண்டிய 5 நேர்மறையாயான செயல்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நேர்மறை மனதுடன் சமைத்தல்: சமையலறை என்பது ஆற்றல் கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகளாலும், சமையல் செய்முறைகளாலும் வடிவமைக்கப்படுகிறது. உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் சமைக்கும்போது நேர்மறை ஆற்றல் உணவு மற்றும் வீடு இரண்டிலும் ஊடுருவி வாஸ்து தோஷத்தை போக்குகிறது. மன அழுத்தம் மற்றும் கோபத்துடன் சமைப்பது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்த வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. வீட்டை சுத்தமாக வைத்திருத்தல்: இன்றைய சூழ்நிலையில் வீட்டை சுத்தமாக வைப்பது கடினமான விஷயமாக இருந்தாலும் தூய்மையான வீடே நேர்மறையான ஆற்றலின் சக்தியாக உள்ளது. துணிகளை மடிக்காமல் அப்படியே போட்டு விடுவது, வீட்டை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது போன்றவற்றை தவிர்த்து வாஸ்து தோஷத்தை நீக்க வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரியுங்கள்.
3. தாவரங்களைப் பராமரித்தல்: தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றி இயற்கையை வளர்ப்பது, முற்றத்தைப் பராமரிப்பது வீட்டை நேர்மறை ஆற்றலால் நிரப்புகின்றன. ஏனெனில், தாவரங்கள் கெட்ட சக்தியை உறிஞ்சி மாற்றும் தனித்துவமான சக்தியை கொண்டுள்ளதால் நேர்மறை ஆற்றல் பெருகி வாஸ்து தோஷம் நீங்குகிறது.
4. தியானம்: தியானம் மன அமைதியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வீட்டில் வாஸ்துவையும் மேம்படுத்துகிறது. நமது அன்றாட வாழ்க்கையின் நடுவில், அமைதியான தருணங்களைக் கண்டறிவது மிகவும் முக்கியம். ஆதலால் தியானம் அமைதியான மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரித்து வாஸ்து குறையைப் போக்குகிறது.
5. வாழ்க்கை அறையை மேம்படுத்துதல்: வீட்டின் மையமாக இருப்பதும் உறவுகள் வளர இடம் கொடுக்கும் வாழ்க்கை அறையில் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவது வெளிப்படையான தொடர்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கதை சொல்வது, வீட்டில் இருப்பவர்களிடம் சிரித்து பேசுவது இது மாதிரியான இணைப்பு தொடர்புகள் வாழ்க்கை அறையில் வாஸ்துவை மேம்படுத்தி நேர்மறை ஆற்றலை அதிகரித்து வாஸ்து தோஷத்தை போக்கி விடுகின்றன.
மேற்கூறிய ஐந்து விஷயங்களை வீட்டில் செய்வதன் மூலம் வாஸ்து குறைபாடு நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.