
ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வழியாகும். அதேபோல சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியக் கேட்டிற்கு வழிவகுக்கும். நெய் என்பது கொழுப்புகள் மற்றும் எக்கச்சக்கமான ஆரோக்கியப் பயன்களைத் தரக்கூடிய ஒரு சிறந்த பொருள். ஒருசில உணவுகளோடு சேர்த்து நெய்யை சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. நெய்யுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 முக்கியமான உணவுப் பொருட்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தேன்: நெய்யுடன் சேர்த்து தேன் சாப்பிடுவதை ஆயுர்வேதம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தக் கலவை உடலில் நச்சு விளைவை ஏற்படுத்தி செரிமான பிரச்னைகள் மற்றும் உடலில் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் தேனோடு நெய் காம்பினேஷனை தவிர்ப்பது மிகவும் நல்லது.
2. டீ அல்லது காபி: நெய்யுடன் டீ அல்லது காபி சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இந்த பானங்களில் காணப்படும் கஃபைன் நெய்யில் உள்ள கொழுப்பில் கரையும் வைட்டமின்களோடு வினைபுரிந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. கூடுதலாக கஃபைனின் தூண்டுதல் விளைவுகள் நெய்யின் அமைதியூட்டும் விளைவுகளோடு மோதி செரிமான பிரச்னைகளை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க வேண்டும்.
3. தயிர்: நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்தோடு வினைபுரிந்து குடல் பாக்டீரியாக்களில் சமநிலையை பாதித்து அஜீரணக் கோளாறு ஏற்படுத்தும் என்பதால், கதகதப்பான மற்றும் குளிர்ந்த தன்மை கொண்ட இரண்டு உணவுகளை தவிர்த்து விடுவது வயிற்றுக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.
4. வெந்நீர்: வெந்நீர், நெய்யின் மூலக்கூறு அமைப்பை மாற்றக்கூடும் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். அதிக வெப்பநிலையின் காரணமாக நெய்யானது ஃபிரீ ரேடிக்கில்களின் உற்பத்திக்குக் காரணமாக அமைகிறது. இந்த காம்பினேஷன் செரிமான செயல்முறையை சீர்குலைத்து, அசௌகரியம் மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும் என்பதால் இந்த காம்பினேஷன்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
5. முள்ளங்கி: முள்ளங்கியின் வாசனை, நெய்யில் உள்ள கொழுப்பு தன்மையோடு மோதி, செரிமான அமைப்பின் சமநிலையை பாதிக்கிறது. மேலும், இதனால் அசௌகரியம், வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை ஏற்பட்டு வயிற்று பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் முள்ளங்கி - நெய் காம்பினேஷனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய ஐந்து உணவுப் பொருட்களையும் நெய்யுடன் சேர்த்து சாப்பிடாமல் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் செயலாகும்.