
பெரும்பாலான வீடுகளில் பிரட் அடிக்கடி வாங்கப்படும். மேலும் பல புதிய ரெசிபிகளை அவற்றை வைத்து முயற்சி செய்யலாம்.
பிரட்டில் பல வகைகள் உள்ளன. பாரம்பரிய பால் பிரட், புளிப்பு, புடா ப்ரெட், போகாசியா, பிரியோச் மற்றும் பல உள்ளன. தேர்வு செய்வது மிகவும் கடினம். இருந்தாலும் அனைத்து பிரட்டுகளும் ஒரே மாதிரியாக செய்யப்படுவதில்லை. சூப்பர் மார்க்கெட் வாங்கும்போது பிரட் பாக்கெட்டுக்களில் உள்ள லேபிளை பார்ப்பது முக்கியம்.
ஒரு பிரட்டை வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
சர்க்கரை அளவை சரிபார்க்கவும்:
பிரட் தயாரிக்கும் செயல்முறைக்கு ஈஸ்டைச் செயல்படுத்த சிறிது சர்க்கரை தேவை. ஆனால் அது மிகவும் குறைவாக மட்டுமே இருக்க வேண்டும் எனவே நீங்கள் பிரட் வாங்கும் போதெல்லாம் லேபிளில் சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளதா? என சரி பார்க்கவும். ஏனெனில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை பெரும்பாலும் அதிகப்படியான சர்க்கரை, கரும்புச்சாறு, தேன் மற்றும் உணவின் ஈரப்பதத்தை தக்க வைக்க இது போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர்.
உப்பு அளவை சரி பார்க்கவும்:
சர்க்கரையைப் போலவே பிரெட் தயாரிப்பதற்கு உப்பும் அளவாக தேவை. ஆனாலும் பெரும்பாலும் பிராண்டுகள் சுவையை அதிகரிக்க தேவையானதை விட அதிக உப்பை சேர்க்கிறார்கள். இது பிரட்டை ஆபத்தானதாக மாற்றும். .ஆய்வுகளின் படி ஒரு துண்டு பிரட்டில் 100 மில்லி கிராம்200 மில்லிகிராம் சோடியத்திற்கு மேல் இருக்கக் கூடாது. எனவே பிரெட் வாங்கும் போது உப்பு அளவை சரி பார்க்க வேண்டும்.
சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பார்க்கவும்:
பிரவுன் பிரட், கோதுமை பிரட் மற்றும் பல தானிய பொருட்களை ஆரோக்கியமான பிரட்களாக வாங்குகிறோம். உண்மையில் அவை ஆரோக்கியமானவை அல்ல. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி தொழிற்சாலைகள் பெரும்பாலும் மற்ற வகை மாவுகளுடன் சேர்த்து அவற்றை சுவையாகவும் செலவு குறைந்ததாகவும் தயாரிக்கின்றன. எனவே முழு கோதுமை பிரட் அல்லது பிற பிரட்களை வாங்கும்போது குறிப்பிட்டுள்ள பொருட்களை எப்போதும் சரி பார்த்து வாங்க வேண்டும்.
தேதியை சரி பார்க்கவும்:
பிரட் வாங்கும் போது செய்ய வேண்டிய முதல் விஷயம் அதன் தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும். உணவு வாங்கி வீணாக்கப்படுவதை தவிர்க்க use By ' 'Best Before ' போன்ற சொற்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளவும்.
ஃபைபர் சத்தை சரி பார்க்கவும்:
பிரட்டின் மிகவும் பிரபலமான கூறுகளில் ஃபைபர் சத்து ஒன்றாகும். ஆனால் பிரெட் தயாரிக்கும் போது பிரட் பெரும்பாலும் நார்ச்சத்தை கணிசமாக இழக்கிறது. அதனால் இதை முற்றிலும் ஆரோக்கியமானது என்று கூறிவிட முடியாது. எனவே பரட்டை வாங்குவதற்கு முன் லேபிளில் குறிப்பிட்டுள்ள நார்ச்சத்தின் அளவை எப்போதும் சரி பார்த்து வாங்கவும்.