மங்கலான பார்வை முதல் ஒளிக்கீற்றுகள் வரை: கண் நோய்களை முன்கூட்டியே எச்சரிக்கும் 5 முக்கிய சிக்னல்கள் என்ன?

ரெகுலர் கண் பரிசோதனை மூலம் கிளைகோமா, நீரிழிவு விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த கண் நோய் போன்றவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பார்வையை பாதுகாக்கலாம்.
eye-diseases
eye-diseases
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

ம்முடைய தினசரி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் வரை, நாம் இந்த கண்களில் ஏற்படும் அறிகுறிகளை புறக்கணிக்கிறோம். நிறைய பேர் ஆரம்ப அறிகுறியை fatigue, ageing,  excessive screen time  என்றெல்லாம் தனக்குதானே நினைத்துக்கொண்டு ignore செய்து விடுகிறார்கள். ஆனால், நமக்கு கண் பார்வையில் பிரச்னை வருவதற்கு முன்னாலேயே  நம்முடைய கண்கள் சில தீவிரமான  கன்டிஷனை நமக்கு எச்சரித்து எடுத்து காட்டலாம். இன்றைக்கு, உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள்  preventable vision impairment ஆல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே  நம் கண்கள் நமக்கு உணர்த்தும் முன்னெச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காமல் அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும்.

ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத ஐந்து அமைதியான கண் அறிகுறிகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

தொடர்ந்து மங்கலாக அல்லது ஏற்ற இறக்கமாக இருக்கும் பார்வை:

திரைகளைப் பார்த்து நீண்ட நேரம் கழித்த பிறகு, அவ்வப்போது பார்வை மங்கலாகத் தெரிவது சகஜமானது. ஆனால், உங்கள் பார்வை அடிக்கடி தெளிவான நிலையிலிருந்து மங்கலான நிலைக்கு மாறினால், அது பார்வை விலகல் குறைபாடுகளைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகள் ஆரம்ப கால கண்புரை அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கலாம். ஆகவே இததகைய அறிகுறிக்கு உடனடி கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:
மெல்ல மெல்ல நம் உடலைச் சிதைக்கும் 10 ஆபத்தான பழக்கங்கள்... உங்கள் ஆயுளைக் குறைக்கிறதா?
eye-diseases

கண் சோர்வு மற்றும் தலைவலி:

படிப்பது அல்லது மடிக்கணினியில் வேலை செய்வது போன்ற அன்றாடச் செயல்பாடுகளின்போது உங்களுக்குத் தொடர்ந்து தலைவலி அல்லது கண் அசௌகரியம் ஏற்பட்டால், அது சரி செய்யப்படாத பார்வைக் குறைபாடுகள் அல்லது சீரற்ற கண் அமைப்பைக் குறிக்கலாம். காலப்போக்கில் இந்த நிலைமைகள் நீங்கவில்லை என்றால், அவை கண் வறட்சி நோய்கள், தொற்றுகள் அல்லது அழற்சி இருப்பதைக் குறிக்கின்றன. மேலும், இவற்றைச் சரியாகக் கையாளாவிட்டால், இத்தகைய நிலைமைகள் கண்களின் சௌகரியத்தைப் பாதித்து, காயம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.

சிவந்த நிறம் மற்றும் எரிச்சல்:

தூசி அல்லது ஒவ்வாமையால் தான் கண்கள் சிவந்து அல்லது நீர் வடிகிறது என்று  கருதி பலர் அதைப் புறக்கணிப்பது வழக்கம். ஆனால், தொடர்ச்சியான எரிச்சல் என்பது கண் வறட்சி நோய்க்குறி, தொற்றுகள் அல்லது அழற்சியின் அறிகுறியாக கூட இருக்கலாம். சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், இந்த நிலைகள் கண் மேற்பரப்பைச் சேதப்படுத்தி, சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

இரவுப் பார்வை மற்றும் ஒளி உணர்திறனில் சிரமம்:

இரவில் தெளிவாகப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது அல்லது விளக்குகளின் ஒளிக்கீற்று கண்ணைப் பறிக்கும்படி இருப்பது, ஆரம்பகால கண்புரை அல்லது விழித்திரையில் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் படிப்படியாகவே உருவாகின்றன. ஆகவே, வாகனம் ஓட்டுவது போன்ற அன்றாட செயல்பாடுகளில் இடையூறு செய்யத் தொடங்கும் வரை, அவற்றைப் புறக்கணிப்பது நல்லதல்ல.

புள்ளிகள் மற்றும் ஒளிக்கீற்றுகள்:

எப்போதாவது நம் கண்களில் புள்ளிகள் மிதப்பது போல் தோன்றினால் அவற்றால் பாதிப்பு இல்லை என்றாலும், உங்கள் பார்வையில் மிதக்கும் புள்ளிகள், ஒளிக்கீற்றுகள் அல்லது நிழலான பகுதிகள் திடீரென அதிகரிக்கும் பட்சத்தில் அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படும். இது ஒரு தீவிரமான நிலையான விழித்திரை விலகலின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

மேற்கூறிய இந்த  ஐந்து அறிகுறிகளைப் புறக்கணித்தால் அவைகள்  நிரந்தரப் பார்வை இழப்பிற்கு கூட வழி வகுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வயதான காலத்தில் நட்பு கருகும் கசப்பான உண்மை: ஒருபக்கம் முயற்சியால் மட்டும் நீளும் உறவுகள்!
eye-diseases

ஆகவே, ரெகுளராக கண் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். கண் அழுத்த நோய் (கிளைகோமா), நீரிழிவு விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த கண் நோய் மற்றும் பெரும்பாலும் அறிகுறிகள் வெளிப்படாமல் உருவாகும் பிற நோய்களைக் கண்டறியவும் உதவும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்தால், முறையான சிகிச்சையோடு சரி செய்ய முடியாத பாதிப்புகளையும் தடுக்கலாம்.

உங்கள் கண்களில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போது அவை அரிதாகவே வலியை உண்டாக்கும். இதுவே, இந்த அமைதியான எச்சரிக்கை அறிகுறிகளை இன்னும் ஆபத்தான நிலைக்கு எடுத்து செல்கிறது. ஆகவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், மருத்துவ உதவியை நாடுவதில் தாமதிக்காதீர்கள்.  வழக்கமான கண் பரிசோதனைகளும், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதும் நீண்ட காலத்திற்கு உங்கள் பார்வையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

logo
Kalki Online
kalkionline.com