பணியை சிறப்பாகச் செய்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் 5 வழிகள்!

ஜூன் 20, உலக உற்பத்தி திறன் தினம்
World Productivity Day
World Productivity Dayhttps://www.oliveboard.in
Published on

ந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேலை செய்துதான் வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. செய்யும் வேலையை சிறப்பாகவும் அலுப்பு தெரியாமல், சுவாரசியமாகவும் செய்வதற்கு உதவும் 5 வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 20ம் தேதி உலக உற்பத்தித் திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இது மனிதர்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதற்கும் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியை தருவதற்குமான வழிகளை வலியுறுத்துகிறது. தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புதுமைகளை ஊக்குவித்து வெற்றிக் கதைகளை பகிர்ந்து கொள்கிறது. அன்றாட நடவடிக்கைகளில் உயர்ந்த இலக்கை அடைய ஊக்குவிக்கிறது. மனிதர்கள் கடினமாக உழைக்காமல் புத்திசாலித்தனமாக தங்கள் பணிகளை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும், செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதனை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளின் முக்கிய நோக்கம் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எளிய யோசனையில் கவனம் செலுத்தாமல், செயல்திறனை வலியுறுத்துகிறது. இதனால் வெற்றி மற்றும் நிறைவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் பழக்கங்களை உருவாக்க மக்களை வலியுறுத்துகிறது.

உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் சுவாரசியமான 5 வழிகள்:

1. பெரிய லட்சியங்கள்: அன்றைய நாளை பெரிய கனவுகளோடு தொடங்க வேண்டும். மிகப்பெரிய லட்சியங்களை அமைத்துக் கொண்டு அதனை நோக்கி விளையாட்டாகவும் சுவாரசியமாகவும் செயல்படத் தொடங்க வேண்டும். சாகச வரைபடத்தில் கனவுகளின் இடத்தைக் குறிக்க எக்ஸ் குறியீட்டை வரைந்து அதை அடைவதற்காக திட்டமிடுவதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.

2. தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்: இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும். உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் அதற்கேற்ற சாஃப்ட்வேரை கணினியில் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு செயலை செய்து முடிப்பதற்கான காலக் கெடுவை நினைவூட்டும். அதே சமயத்தில் தேவையான தொழில்நுட்ப உதவியையும் தரும்.

இதையும் படியுங்கள்:
மச்சாவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவிற்கு ஏற்பட்ட சோதனைகள் தெரியுமா?
World Productivity Day

3. அன்றைய வேலையை அன்றே முடித்தல்: அன்றைய வேலையை அன்றே செய்து முடிக்க வேண்டும். இதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடக்கூடாது. உதாரணமாக, இமெயிலில் இருக்கும் மெயில்களை எல்லாம் அன்றே பார்த்து அதை ஒழுங்கமைக்க வேண்டும். நிறைய சேர்ந்து விட்டால் மொத்தமாக அமர்ந்து வேலை செய்ய நேரிடும். நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தித் திறனையும் பாதிக்கும்.

4. வெகுமதி அளித்தல்: ஒரு பணியை சிறப்பாக செய்து முடித்த பின் உங்களுக்கு நீங்களே வெகுமதி கொடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெகுமதி ஒரு சாக்லேட் ஆகவோ ஐஸ்கிரீமாகவோ இருக்கலாம். ஒரு ஐந்து நிமிடம் ஜாலியாக நடனமாடி விட்டு அல்லது வெளியில் வேகமாக ஒரு உலா சென்று விட்டு வரலாம்.

5. உடற்பயிற்சி: சிறிய உடற்பயிற்சி மூலம் அன்றைய நாளுக்கான ஆற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அது யோகாவாகவோ விறுவிறுப்பான நடைப்பயிற்சியாகவோ நடனமாகவோ இருக்கலாம்.

அதிக ஆற்றலுக்காக கவனம் செலுத்துவதற்கு இந்த செயல்கள் ஒருவரை உற்சாகமாக பணிபுரிய வைக்கும். உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com