உடல் அழகியலை பாதிக்கும் 6 காரணிகள்!

Factors affecting beauty
Factors affecting beauty
Published on

ண்மையான அழகு என்பது நம்மை ஏற்றுக்கொள்வதிலும், நம் குறைபாடுகள் அனைத்தும் நம்மில் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொள்வதுமே உண்மையான அழகாகும். அழகு என்பது உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதே. அழகான உடலை பாதிக்கும் காரணிகள் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

1. தவறான வாழ்க்கை முறை: தவறான உணவுப் பழக்கங்களும், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் நம் ஆரோக்கியத்தை வெகுவாக குறைத்து விடும். தூக்கமின்மை, இரவில் நேரம் கழித்து உறங்குவது, வேளை கெட்ட வேளையில் நேரம் கழித்து உண்பது போன்ற பழக்கங்கள் நமது அழகிய உடலை பாதிக்கும். அதிகப்படியான கலோரிகள் நிறைந்த உணவுகளையும், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் குளவிகள் கூடு! குளவிகளை வெளியேற்றுவது எப்படி?
Factors affecting beauty

2. மன அழுத்தம்: மன அழுத்தம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி நம் சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பு போன்றவற்றை பாதிக்கலாம். மன அழுத்தம் காரணமாக நம் உடல் ஆரோக்கியம் இழந்து வலுவின்றி போகலாம். மனஅழுத்தம் இன்றி ஆரோக்கியமாக இருக்க எந்த பிரச்னையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் மனதை லேசாக வைத்துக்கொண்டு தீர்வு காண்பது நல்லது. மனதிலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்கி, எதையும் நேர்மறையாக அணுகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

3. தூக்கம்: அழகான உடலைப் பேணுவதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தூக்கமின்மை உடல் எடை அதிகரிப்பையும், சருமப் பிரச்னைகள், மன அழுத்தம், சோர்வு போன்ற உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்கும். நல்ல தூக்கம் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து பளபளப்பை மேம்படுத்தும். தூக்கத்தின் பொழுது உடலின் பழுதுபார்ப்பு செயல்முறைகள் நடைபெறுகின்றன. போதுமான தூக்கம் இல்லையெனில் சிக்கல்தான். போதுமான தூக்கம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும்.

4. ஊட்டச்சத்து குறைவு: ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாமல் என்னதான் வெளியில் இருந்து, எவ்வளவு ஒப்பனை கிரீம்களை தடவினாலும் நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டமான உணவுதான் நம் சருமத்தை பளபளப்பாக்கும். தினமும் பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது, கீரை மற்றும் காலே ஆகியவைதான் நம் ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்றது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும், பருப்பு வகைகள் தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நம்மையும் நம் சருமத்தையும் அழகாக பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
4 வகையான ஃபேன் மாடல்கள் - எது பெஸ்ட்?
Factors affecting beauty

5. சுற்றுச்சூழல் மாசுபாடு: காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு போன்றவை நம் உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளை உண்டுபண்ணும். ஒருவர் அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு ஆளாகும்பொழுது பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இவை நம் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களைக் குடிக்கவும், சமைக்கவும், விவசாயம் செய்வதற்கும் என பயன்படுத்த முடியாதபடி மாசுபட்டு இருப்பதால் பலவிதமான நோய்களுக்கு வழி வகுக்கிறது.

6. உடற்பயிற்சியின்மை: உடற்பயிற்சி இல்லாமை அழகான உடலை பல வழிகளிலும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்பு, தசை பலவீனம், மெலிந்த சருமம், உடல் சோர்வு போன்ற உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடற்பயிற்சியின்றி இருப்பது மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மையை குறைத்து மூட்டுகளில் முடக்கம் ஏற்பட வழிவகுக்கும். உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடல் கழிவுகளை வெளியேற்றி உடலை அழகுடன் மிளிரச் செய்யும்.

இந்தக் காரணிகளைப் புரிந்து கொண்டு சரியான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் அழகிய உடலை பராமரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com