

நாம் அனைவரும் பொதுவாக ஏதாவது பொருட்கள் வாங்கி வந்தவுடன், “புதியதுதானே” என்று நினைத்து அதனை உடனே பயன்படுத்த தொடங்கிவிடுவோம். ஆனால் அது தவறு. புதிய பொருட்களில் தூசி, கிருமிகள் அல்லது தயாரிப்பு மற்றும் போக்குவரத்து காலத்தில் ஏற்பட்ட இரசாயனங்களின் தாக்கம் இருக்கலாம். எனவே, அவற்றை முறையாக சுத்தம் செய்துதான் பயன்படுத்த வேண்டும்.
அப்படி முதல் முறையாக பயன்படுத்தும் முன் கண்டிப்பாக கழுவ வேண்டிய 6 பொருட்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சமையலறை மற்றும் உணவு பரிமாறும் பொருட்கள்:
உணவை தயாரிக்க, பரிமாற அல்லது சேமிக்க பயன்படுத்தப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், முதல் முறையாக பயன்படுத்துவதற்கு முன் கண்டிப்பாக கழுவவேண்டும். இதில் கண்ணாடிகள், கப், மறுபயன்பாட்டு தண்ணீர் பாட்டில்கள், கரண்டி, தட்டு, கிண்ணங்கள், சேமிப்பு பெட்டிகள், பாத்திரங்கள் (பானைகள், வாணலிகள்), சிறிய மின்சாதனங்களின் நீக்கக்கூடிய பகுதிகள் (காபி மேக்கர், உணவு செயலி பிளேட்கள்) மற்றும் cast iron பொருட்கள் அடங்கும்.
ஒரு gentle wash முறை, அதாவது எளிய dish washing liquid கொண்டு கழுவுவதால், தயாரிப்பு மற்றும் பேக்கிங் செயல்முறையில் ஏற்பட்ட தூசி மற்றும் மீதமுள்ள துகள்களை நீக்க உதவும். அவை உணவில் கலப்பதை இது தடுக்கும்.
குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பொருட்கள்:
குழந்தைகள் மிகவும் சென்சிட்டிவாக இருப்பதால், புதிய பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றை சுத்தம் செய்வது அவசியம். இதில் போர்வைகள், உடைகள், pacifiers, பொம்மைகள், teethers, பாட்டில்கள் போன்றவை அடங்கும். மென்மையான, குழந்தைக்கு பாதுகாப்பான சோப்பு மற்றும் வெந்நீர் பயன்படுத்தி கழுவினால் கிருமிகள் நீங்கும். Dishwasher-ல் கழுவக்கூடிய பொருட்களை dishwasher-ல் கழுவினால் முழுமையாக சுத்தமாகும்.
இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம், புதிய பொருட்களை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பயன்படுத்தலாம்.
குழந்தை களுக்கான பொருட்களுக்கு மென்மையான சோப்பு பயன்படுத்தவும். மைக்ரோஃபைபர் துணிகளுக்கு fabric softener தவிர்க்கவும், மற்றும் care label-ல் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
படுக்கை விரிப்புகள் மற்றும் உறைகள்
உங்கள் படுக்கையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, புதிய படுக்கைத் துணிகளை பயன் படுத்துவதற்கு முன் அவற்றை கழுவுவது அவசியம். தயாரிக்கும் இடங்கள் மற்றும் போக்குவரத்து செயல்முறையில் ஏற்பட்ட இரசாயனங்கள், தூசி மற்றும் அழுக்கு போன்றவை இதில் இருக்கக்கூடும்.
“தொழிற்சாலை தரை எவ்வளவு அழுக்காக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியாது. அந்த கிருமிகள் புதிய துணிகளில் எளிதாக சேரலாம்.” எனவே, படுக்கை விரிப்புகள் மற்றும் உறைகளை ஒரு முறை தண்ணீரில் போட்டு அலசி பிறகு பயன்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்யும் பொருட்கள்:
இது சற்றே விசித்திரமாக தோன்றலாம். ஆனால் சுத்தம் செய்யும் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன் கழுவவேண்டும். இதில் மாப், மைக்ரோஃபைபர் துணி, மறுபயன்பாட்டு தூசி துடைப்பான், ஸ்பாஞ்ச் போன்றவை அடங்கும். இவை தயாரிப்பு செயல்முறையில் தூசி மற்றும் கிருமிகளை சேகரித்து இருக்கலாம். மேலும், இந்த பொருட்கள் தானாகவே தூசியை பிடிக்கும் தன்மை கொண்டதால், சிறிய அளவு மீதமுள்ள அழுக்கும் அதன் செயல்திறனை பாதிக்கலாம்.
மைக்ரோஃபைபர் துணிகளை தனியாக கழுவவேண்டும். மற்ற துணிகளுடன் சேர்த்து கழுவினால் lint படிந்துவிடும். மேலும், fabric softener பயன்படுத்தக்கூடாது. அது மீண்டும் ஒரு அடர்த்தியான படலத்தை உருவாக்கும்.
துவாலைகள் (Towels)
நாம் குளித்த பிறகு பயன்படுத்தும் துவாலைகள் சுத்தமாக இருக்க வேண்டும். புதியதாக இருந்தாலும் துணிகளை பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரில் போட்டு அலசுவது நல்லது. இது bath towel, hand towel மற்றும் kitchen towel அனைத்துக்கும் பொருந்தும். இதனால் தூசி, துகள்கள் மற்றும் கிருமிகள் நீக்கப்படும்.
உடைகள் (Clothing)
புதிய உடைகள், second-hand உடைகள் மற்றும் பிறரிடமிருந்து கிடைத்த உடைகள் அனைத்தையும் முதல் முறையாக அணிவதற்கு முன் தண்ணீரில் போட்டு அலசவேண்டும். சருமத்துடன் நேரடியாக தொடர்பில் வரும் உடைகள், குறிப்பாக உள்ளாடைகள் மற்றும் sports wear (leggings, sports bra) ஆகியவற்றை அலசுவது மிகவும் முக்கியம்.
உற்பத்தியாளரிடமிருந்து கடை வரை வரும் பயணத்தில் பலரின் தொடுதலால் கிருமிகள் மற்றும் இரசாயனங்கள் படிந்திருக்கலாம். மேலும், கடையில் யார் யார் அந்த உடைகளை முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியாது. அதனால், முதல் முறையாக அலசும் முன் care label-ல் உள்ள வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.
நாம் அனைவரும் உடைகள், பாத்திரங்கள் மற்றும் துணிகளை அடிக்கடி கழுவவேண்டும் என்பதை அறிவோம். அதேபோல், புதிய பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன் கழுவுவது ஒரு நல்ல பழக்கமாகும். புதிதாக வாங்கிய பொருட்களை உடனே பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவற்றை முதலில் சுத்தம் செய்வது நம் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமானது.