வீட்டில் பாதுகாப்பு கேமரா அமைக்க ஏற்ற 6 முக்கியப் பகுதிகள்!

Suitable areas for installing security cameras
security cameras
Published on

ந்தக் காலத்தில் பெரிய பெரிய வசதியான தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமான விஐபி பங்களாக்களில் மட்டுமே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா எனப்படும் பாதுகாப்பு கேமராக்களை (security camera), தற்போது சிறிய வீடுகள், அலுவலகங்கள் என்றாலும் அமைப்பது பரவலாகி வருகிறது. காரணம், அன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த திருட்டுக்கள் மற்றும் வன்முறைகள் தற்போது பெருகிவிட்டன. இதைத் தடுக்கவும் தங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவும் இதுபோன்ற கேமராக்களைப் பொருத்துவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பாதுகாப்பு கேமராக்கள், பார்சல்களைப் பெறுதல், சுற்றுச்சூழல் நபர்களை கவனித்தல், ஸ்பாட்லைட்களை இயக்குதல் போன்ற பலவற்றிற்கு பல பயனுள்ள விழிப்பூட்டல்களை அமைக்க அனுமதிக்கின்றன. ஆனால், அவை சரியான இடத்தில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை கவனிக்க வேண்டும். நமது வீடுகளில் எந்தெந்த இடங்களில் இந்த கேமராக்களைப் பொருத்த வேண்டும் எனும் சந்தேகம் பலருக்கும் உண்டு. வீட்டில் கேமராக்கள் பொருத்த 6 முக்கிய பகுதிகள் குறித்து இந்தப் பகுதியில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!
Suitable areas for installing security cameras

பொதுவாக, முன் கதவுதான் (Front Door) வீட்டின் உள்ளே ஊடுருவும் நபர்களுக்கான நுழைவுப் புள்ளி என்பதால் இங்கு ஒரு கேமராவை நிறுவுவது திருடர்கள் நுழைவது போன்ற குற்றத்தைத் தடுக்கவும், கவனிக்கத்தக்க முக்கியமான காட்சிகளைப் பிடிக்கவும் உதவும். தெளிவான முகங்களைக் காட்டும் அங்கீகாரத்திற்காக அதை மேலே அல்லது பக்கவாட்டில் பொருத்துவதைத் திருடர்களால் கருத்தில் கவனிக்கப்படும் வீட்டின் முக்கியப் பகுதியாக உள்ளது. பின்புறம் மற்றும் பக்கக் கதவு (Back and Side Doors) பகுதிகளைத்தான் அவர்கள் எளிதாக உடைக்க முயல்கின்றனர். எனவே, இந்தக் கதவுகளுக்கு அருகில் கேமராக்களை வைப்பது மதிப்புமிக்க தேவையான ஆதாரங்களை வழங்குவதோடு பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

கேரேஜ் மற்றும் டிரைவ்வேக்கள் (Garage and Driveway), அதாவது வண்டிகள் பயணிக்கும் பாதைகள் அடிக்கடி கொள்ளையர்களால் குறிவைக்கப்படுகின்றன. ஆகவே, கேரேஜ் மற்றும் டிரைவ்வேயில் காணாத வகையில் பொருத்தப்பட்ட கேமராக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்காணித்து பைக்குகள், கருவிகள் மற்றும் கார்கள் போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் செய்யும் பணியில் வெற்றி பெற உதவும் 5 அரிய ஆலோசனைகள்!
Suitable areas for installing security cameras

திருடர்கள் மறைவதற்கு உதவுவதில் முதலிடம் பிடிப்பது படிக்கட்டுகளே (Staircases). வீட்டில் இருக்கும் படிக்கட்டுகளுக்கு அருகில் கேமராக்களை நிறுவுவது உங்கள் வீட்டின் உள்ளே உள்ள பல நிலைகளில் உள்ள நகர்வுகளையும், மற்ற பகுதிகளை அணுக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களையும் படம் பிடிக்க உதவுகிறது.

இவற்றுடன் வீட்டின் பொதுவான பகுதிகளான (Common Areas) வரவேற்பறை, சமையலறை அல்லது மைய ஹால் போன்ற குடும்பம் கூடும் இடங்களில் கேமராக்களை வைப்பது அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது.

நம் பார்வை அதிகம் படாத அல்லது நம்மால் அதிகம் புழங்கப்படாத பின்புற முற்றம் மற்றும் பக்க முற்றங்கள் (Backyard and Side Yards) ஊடுருவும் தீய நபர்களுக்கு எளிதான அணுகலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே, கொல்லைப்புறம் மற்றும் பக்க முற்றங்களைப் பார்த்தபடி அமைக்கும் கேமராக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்து எச்சரிக்கை தந்து வீட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு உதவும்.

மேற்சொன்ன இந்த 6 இடங்கள் மட்டுமின்றி, வீட்டைச் சுற்றி உள்ள இருண்ட மூலைகள், புதர்கள் அல்லது மரங்களுக்குப் பின்னால் மற்றும் வெளிப்புறக் கட்டடங்கள் அல்லது கொட்டகைகளுக்கு அருகிலும் கவனம் செலுத்துவதைக் கருத்தில் கொண்டால் குற்றங்களைத் தடுத்து பாதுகாப்புப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com