
தினசரி அன்றாட வாழ்க்கையில் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய பயனுள்ள சில வீட்டுக் குறிப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* சாக்பீஸ்களை பொடி செய்து ட்யூப் லைட்டை சுற்றி தடவி வைத்தால் பல்லிகள் வராது.
* மெழுகுவர்த்திகளை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து உபயோகப்படுத்தினால் திரி எரியும்போது சீக்கிரத்தில் உருக்காது அதிக நேரம் எரியும்.
* துருப்பிடித்த பூட்டுகளுக்கு எண்ணெய் தடவினால் அழுகு படிந்து மேலும் இறுகி விடும். எண்ணெய்க்கு பதிலாக பவுடரை தூவி பிறகு திறந்தால் ஈசியாக இருக்கும்.
* தரமான எவர்சில்வர் பாத்திரம் வாங்குவதற்கு முன்னால் பாத்திரத்தின் அடிப்பாகத்திலோ அல்லது வாய் விளிம்பின் பாகத்திலோ ஒரு சிறிய காந்தத்துண்டை கொண்டு செல்லுங்கள். காந்தத்துண்டு பாத்திரத்தோடு ஒட்டினால் அது மட்டமானது ஆகும்.
* ஹெல்மெட்டை தலையில் பொருத்திக்கொள்வதற்கு முன்பு அதன் உட்புறத்தில் ரப்பர் மற்றும் ஸ்பான்ஞ் மடிப்புகளை ஒரு முறை பார்த்துவிட்டுத் தலையில் பொருத்துங்கள். காரணம், அந்த மடிப்புகளில் ஏதேனும் பூச்சிகள் தங்கும் வாய்ப்பு உள்ளது.
* புளோரசன்ட் பெயின்டை வாங்கி வீட்டிலுள்ள எலக்ட்ரிக் சுவிட்சுகளில் அழகாக வட்டமாகவோ சதுரமாகவோ தடவி வையுங்கள். வெளியே சென்று விட்டு வரும்போது இருட்டில் சுவிட்சை தேட வேண்டியில்லாமல் அந்த பெயின்டால் சுவிட்ச் போர்டு வண்ணம் தெரியும்.
* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
* வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
* துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் யூகலிப்டஸ் ஆயில் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
* உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
* பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
* பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
* புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.
* எப்பொழுதாவது உபயோகிக்கும் ‘ஷூ‘க்களில் நாப்தலின் உருண்டை ஒன்றை ஒவ்வொரு ‘ஷூ‘விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.