வாழ்வின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வித்திடும் 6 யுக்திகள்!

Strategies that foster growth
Strategies that foster growth
Published on

ருவரது மனநிலைதான் அவரது வளர்ச்சிக்கு வித்திடுகிறது. குடும்பம், சமூகம் ஆகியவற்றுடன் இணக்கமாக இருப்பதற்கும், அவரவரது மன மகிழ்ச்சிக்கும் மனநிலை மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் ஒருவரது தனிப்பட்ட வளர்ச்சிக்கு வித்திடும் ஆறு யுக்திகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. குறைவான எதிர்வினையாற்றுதல்: எந்த ஒரு செயலானாலும், சொல்லானாலும் உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் பொறுத்திருந்து ரியாக்ட் செய்வதால் இரு தரப்பினரிடையே ஆத்திரம் அதிகரிக்காமல் இருப்பதோடு, அமைதியாக ஒருவரது உணர்ச்சிகளை கவனிப்பதன் மூலமாக ஆரோக்கியமான வழியில் தெளிவான மன நிலைக்கு மாறி பதிலளிக்க முடியும்.

2. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றவர்களை அல்ல: ஒருவர் மற்றவரை கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ளும்போதே விரக்தி மற்றும் மன அழுத்தம் குறைந்து சுயமுன்னேற்றம், சுய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், எப்பொழுதும் ஒருவர் தன்னுடைய எண்ணங்கள், நடத்தைகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். இதனால் சிறந்த உறவு மேலாண்மை மற்றும் நட்பு மேலாண்மை ஏற்பட்டு ஆரோக்கியமான தொடர்புகளுக்கும் அதிகமான தெளிவுக்கும் வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியா - அறிய வேண்டிய சில ஆச்சரியமான உண்மைகள்!
Strategies that foster growth

3. எதையும் எதிர்பாராமல் இருத்தல்: எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளும்போது ஏமாற்றமும் குறைவாக இருக்கும். இந்த அணுகுமுறை உறவு மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளுக்கான ஆரோக்கியமான முறைக்கு வழிவகிக்கிறது. சில சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

4. முடிந்ததை செய்தல்: எந்த ஒரு செயலிலும் பரிபூரணத்துவத்தை அடைய நினைப்பதை விட, செய்ய முடிந்ததை செய்வது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்போது தோல்வி பயம் மறைந்து கற்றல் முன்னேற்றம் அடைகிறது. பிறருடைய ஒப்புதலை எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை ஒருவர் செய்யும்போது அது உள்ளார்ந்த உந்துதலுக்கு வழிவகுக்கும்.

5. பிறரிடம் எல்லாவற்றையும் சொல்வதை நிறுத்துங்கள்: சில தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒருவர் தனக்குள்ளே வைத்துக்கொள்ளும்போது அது மேலும் சுய முன்னேற்றம் அடைகிறது. எல்லா விஷயங்களையும் பிறரிடம் பகிர்வதை நிறுத்த வேண்டும் எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்ல வேண்டும். பெரும்பாலும் ஒருவருடைய வெற்றியில் எல்லாருமே மகிழ்ச்சி அடைவதில்லை. சிலர் மிக ரகசியமாக நீங்கள் தோல்வியுற வேண்டும் என்று விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்ப்பது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்குமா?
Strategies that foster growth

6. நண்பர்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்தல்: நேர்மறை எண்ணம் கொண்ட நண்பர்கள் உடன் இருப்பவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பார்கள். மேலும், சவால்களை சமாளிக்கவும் தேவையான ஊக்கத்தை அளிக்கவும் ஆதரவான நட்புகள் தேவைப்படுகின்றன. நட்பில் விவேகத்துடன் இருப்பது ஆரோக்கியமான எல்லைகளை ஏற்படுத்த உதவி, அமைதியான மனநிலையை ஆதரிக்கும் என்பதால் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேற்கூறிய ஆறு விஷயங்களில் ஒருவர் கவனமாக செயல்பட்டாலே வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com