இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூம் பாறை பகுதிகள்தான் உலகிலேயே நீருக்கடியில் இருந்து முதலில் வந்த நிலப்பகுதி என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 3ல் 2 டாக்டர்கள் இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அவை: கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் தெலங்கானா.
இந்தியாவில் பட்டதாரிகள் அதிகம் பேர் இருப்பது ஜெயின் மதத்தில்தான். இந்திய பட்டதாரிகளில் இவர்களின் பங்களிப்பு 25 சதவீதம். அடுத்து கிறிஸ்தவர்கள் 8 சதவிகிதம், சீக்கியர்கள் 6.4 சதவிகிதம், புத்த மதத்தினர் 6.2 சதவிகிதம், இந்துக்கள் 6 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 3.8 சதவிகிதம்.
இந்திய மாணவர்களில் 23 சதவிகிதம் பேர் டாக்டராகவும், 23 சதவிகிதம் பேர் இன்ஜினியர்கள் ஆவதற்கும், 16 சதவிகிதம் பேர் சாப்ட்வேர் இன்ஜினியராகவும், 8 சதவிகிதம் பேர் விஞ்ஞானிகள் ஆவதற்கும் விரும்புகிறார்களாம்.
வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிகளவில் 74 சதவிகிதம் பேர் டியூஷன் செல்கிறார்கள். அதுவும் கணக்கு பாடத்திற்கு. உலகிலேயே வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான். வகுப்பறையில் கரும்பலகையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது 56 சதவிகிதம்.
உலகளவில் ஆண்டுக்கு 930 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உண்ணாமல் வீணாகிறது. அதில் இந்தியாவில் மட்டும் ஒரு நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவுப் பொருட்களை உண்ணாமல் வீணடிக்கிறார் என்கிறது ஓர் ஆய்வு.
இந்தியாவில் தனது வயதான காலத்தில் வாழ்வதற்கு என்று 3ல் ஒருவர்தான், அதாவது 33 சதவிகிதம் பேர்தான். வருங்காலத்திற்கு என்று சேமிக்கிறார்கள்.
இந்தியாவில் 56 சதவீதம் பேர் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்வது தங்களது காலை உணவுக்காகத்தான் என்கிறது ஓர் ஆய்வு.
இந்தியாவில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மாதம் ஒருமுறையாவது இரவில் பயணம் செய்வோர் 17 சதவீதம் பேர் என்கிறார்கள். அதில் 8 சதவீதம் பேர் தெய்வ தரிசனத்திற்காக இரவில் பயணம் செய்யும் பக்தர்கள்.
இந்தியாவில் 5ல் ஒருவர் தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்தேதான் செல்கிறார்களாம். 33 சதவீதம் பேர் அரசாங்க பேருந்துகளை பயன்படுத்துகிறார்களாம்.
மாதேரன் (Matheran) மலையானது மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,625 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் மாதேரன். மராத்தி மொழியில் மாதேரன் என்றால் ‘மலைகளின் நெற்றியில் உள்ள காடு’ என்று பொருள். இந்த மலைவாசஸ்தலத்தின் சுற்றுச்சூழலை புகை மாசிலிருந்து காப்பதற்காக இங்கு வானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆசியாவிலேயே வாகனங்கள் அனுமதிக்கப்படாத ஒரே மலைவாசஸ்தலம் மாதேரன் மட்டுமே.
ஒரு கிராமத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் இரட்டையர்களாக உள்ளனர் என்றால் நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், உண்மை. இந்த கிராமத்தில் பிறந்த குழந்தைகள் எல்லாம் இரட்டையர்கள்தான். இந்திய மாநிலமான கேரளா, கோடினி என்ற கிராமத்தில் மொத்தமாக 250க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்பது இதுவரை தெரியாமலே உள்ளது.