குறைவான வேகத்தில் செல்வது, எரிபொருள் சேமிப்புக்கு உதவுமா?

Car Fuel
Car Fuel
Published on

அனைவருடைய மாத சம்பளத்தில் முதல் செலவாக இருப்பது காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் செலவுதான். இது தவிர காரில் பராமரிப்புக்கென தனியாக செலவிட வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் காரின் பராமரிப்புக்கும் எரிபொருள் பயன்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது. அந்த வகையில் காரின் எரிபொருள் செலவைக் குறைக்கும் 6 வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
கார் வாங்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது சரியா?
Car Fuel

1. தொடர்ச்சியான கார் பராமரிப்பு

தொடர்ச்சியாக காரை சர்வீஸ் செய்து பழுதில்லாமல் வைத்திருக்கும்போது கார் குடிக்கும் எரிபொருள் குறைவாக இருக்கும். டயர்களில் காற்றழுத்தத்தை சீராக வைத்திருப்பது, மற்றும் என்ஜினின் காற்று வடிக்கட்டியை சுத்தமாக வைத்திருப்பது போன்றவற்றால் என்ஜினின் செயல்பாடு சிறப்பாக அமைந்து எரிபொருளை குறைவாக எடுத்துக் கொள்ளும்.

2. பயணத்திற்கு சிறந்த வழியை தேர்வு செய்வது

பயணத்தை துவங்குவதற்கு முன்பாக எவ்வழியில் சென்றால் எரிபொருள் குறைவாக செலவிடப்படும் என்பதை யூகித்து அந்த வழியாக செல்லவும். சில நேரங்களில் குறுக்கு வழியில் செல்வது எரிபொருள் செலவை அதிகரித்து சேதாரத்தை உண்டாக்க கூடும் என்பதால் யூகித்து பயணிக்க வேண்டும்.

3. ஆக்ஸலரேஷன் & பிரேக்கை பயன்படுத்துவது

புதியதாக கார் ஓட்டுபவர்களை போன்று அவ்வப்போது ஆக்ஸலரேஷன் & பிரேக் பெடல்களை அழுத்திக் கொண்டிருக்காதீர்கள். ஆக்ஸலரேஷன் மற்றும் பிரேக் நேரடியாக காரின் எஞ்சினை கண்ட்ரோல் செய்யக்கூடியவை என்பதால் முற்றிலுமாக சடன் ஆக்ஸலரேஷன் & பிரேக்கை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சொந்த கார் - வாடகைக் கார்; எது சிறந்தது?
Car Fuel

4. மிதமான வேகத்தை பராமரிக்கவும்

அதிவேக பயணம் ஆபத்தாக முடியும் என்பது மட்டுமின்றி, எரிபொருள் செலவும் அதிகமாக இருக்கும். அதேநேரம், மிகவும் குறைவானவேகத்தில் செல்வது, அதிக எரிபொருளில் குறைந்த தொலைவை கடக்க வேண்டியதாகி விடும். ஆகவே மித வேகம் மிக நன்று.

5. தேவையில்லாத சுமைகளை குறைக்கவும்

காரின் என்ஜின் எந்த அளவிற்கு உழைக்கிறதோ, அந்த அளவிற்கு எரிபொருளை எடுத்துக் கொள்ளும் என்பதால் காரில் தேவையில்லாத சுமைகளை குறைத்து என்ஜினின் வேலை பளுவை குறைக்கலாம். மேலும், காருக்கு உள்ளே தேவையில்லாத பொருட்களை தவிர்ப்பதன் மூலம் காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்றவை விரைவில் சேதமடைவதையும் தவிர்க்கலாம்.

6. ஏசி-ஐ குறைவாக பயன்படுத்தவும்

காரில் வழங்கப்படும் பேட்டரி மூலமாக தான் ஏசி, விளக்குகள் என அனைத்து எலக்ட்ரானிக் பாகங்களும் செயல்படுகின்றன. அந்த பேட்டரிக்கு சார்ஜ் கொடுப்பது காரின் என்ஜின் ஆகும். ஆகையால், ஏசி செயல்பாடு மறைமுகமாக என்ஜினின் செயல்திறனை சார்ந்துள்ளதால், தேவையில்லாத நேரங்களில் ஏசி-ஐ ஆஃப் செய்துவிடுவது நல்லது.

மேற்கூறிய 6 வழிமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக காரின் எரிபொருள் செலவு குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com