மூளை உற்சாகமாக செயல்பட உதவும் 7 பயிற்சிகள்!

உற்சாகமான மூளை
உற்சாகமான மூளை
Published on

டல் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உடற்பயிற்சி அவசியம். அதுபோல. மனித மூளை உற்சாகமாக செயல்பட சில பயிற்சிகள் அவசியம். அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. புத்தகம் வாசித்தல் மற்றும் எழுதுதல்: புத்தகங்களை வாசிக்கும்போது அது அறிவை விரிவுபடுத்துகிறது மந்றும் மேம்படுத்துகிறது. ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும். எழுதுதல் மூளைக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பயிற்சியாகும். இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பத்திரிக்கைக்கு படைப்புகள் எழுதுதல் ஒரு பயனுள்ள வேலையாகும். மேலும், இது மூளையை எப்போதும் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் வைக்கிறது.

2. புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள்: குறுக்கெழுத்துப் புதிர்களில் ஈடுபடுவது சொல்லகராதி மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. சுடோக்கு போன்ற புதிர் விளையாட்டுகள் தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் வடிவ அங்கீகாரத்தை மேம்படுத்துகிறது. பொதுவாக புதிர்கள் மூளையின் இடதுபக்கத்தை சார்ந்த பகுத்தறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

3. புதிய திறன்களை கற்றல்: இசைக்கருவியை வாசிப்பது அல்லது வாசிக்க கற்றுக்கொள்வது மூளையின் பல பகுதிகளை சுறுசுறுப்பாக வைக்கிறது. புதிய மொழியை கற்றலும் அறிவாற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலையும் உயர்த்துகிறது.

4. உடற்பயிற்சி: மூளைக்கு இரத்த ஓட்டத்தை உடற்பயிற்சி மேம்படுத்துகிறது, அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. எப்போதும் உடலை மட்டுமல்ல, மூளையையும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
தினசரி அரிசி சார்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிடும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை! 
உற்சாகமான மூளை

5. யோகா மற்றும் தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் கவனத்தை அதிகரிக்கிறது. மேலும், மனப் பதற்றத்தைக் குறைக்கிறது. செய்யும் வேலையில் கவனம் குவிக்க உதவுகிறது. இவை உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் நினைவாற்றல் மேம்பாடு ஆகியவற்றை வழங்கும்.

6. நினைவகப் பயிற்சிகள்: ஞாபக சக்தியை மேம்படுத்த நினைவகப் பயிற்சிகளை செய்ய வேண்டும். இதற்கென்று சில விளையாட்டுகள் உள்ளன. ஐந்து, ஆறு பொருட்களை ஒரு 30 நொடிகள் மட்டும் அவற்றை பார்த்துவிட்டு என்ன பார்த்தோம் என்பதை சொல்வது, கடந்த வாரம் படித்த புத்தகத்திலிருந்து நிகழ்வுகளை அல்லது கதையை அப்படியே சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இவை மூளையின் ஆற்றல் மட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

7. சமூக செயல்பாடுகள்: எப்போதும் வீட்டுக்குள்ளேயே தனித்து இருக்காமல் வெளியே சென்று பிறருடன் உரையாடுவது, சிந்தனையை தூண்டுகிறது மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. தேவைப்படுபவருக்கு சேவை செய்தல், உதவுதல் போன்ற சமூக செயல்பாடுகள் மூளையை உற்சாகமாகவும் மனதை சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com