வாழ்வில் ஒருவரை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்க வழக்கங்கள்!

7 habits that will make you a superior person
7 habits that will make you a superior person
Published on

னிதர்கள் ஒவ்வொருவரும் தாம் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஒவ்வொரு திட்டங்கள் வகுத்து செயல்படுவார்கள். ஆனால், பொதுவாக ஒரு சாதாரண மனிதரை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்க வழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. காலை தியானம்: காலையில் எழுந்ததும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது மூச்சு விடுவதில் கவனம் செலுத்துவதால் மனம் சுத்தமடைந்து அன்றைய நாள், நாம் எப்படி இருக்க விரும்புகிறோமோ அதை காட்சிப்படுத்தியபடியே அமையும் . மேலும், பாசிட்டிவாக யோசிக்கத் தோன்றும் என்பதால் காலை தியானத்தைத் தவிர்க்கக் கூடாது.

2. உடற்பயிற்சி: தினமும் காலையில் யோகாசனம், வாக்கிங் இப்படி எந்த வகை உடற்பயிற்சியானாலும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை  செய்யும்போது மனமும் உடலும் திடம் அடைவதால் நாம் எண்ணிய உயர்ந்த இடத்தைப் பிடிக்க உதவியாக இருக்கும்.

3. கற்றல்: உலகில் நாம்  கற்ற விஷயங்களை விட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை 15 முதல் 30 நிமிடங்கள் வரை செலவழித்து உலகை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்த்து கற்றுக்கொண்டு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

4. இலக்கை நிர்ணயித்தல்: தினமும் சிறு சிறு விஷயங்களுக்கு கூட இலக்கை நிர்ணயித்துக் கொள்வதால், அதாவது இந்த வேலையை இன்று முடித்து விட வேண்டும் என லிஸ்ட் போட்டு வேலை செய்வதால் ஒழுக்கமும் கவனமும் அதிகரித்து நாம் உயர்வான இடத்திற்குச் செல்ல உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தமிழ் மூதாட்டி 'ஔவையார் அம்மன்' கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?
7 habits that will make you a superior person

5. ஜர்னல் எழுதுதல்: வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு சௌகரியங்கள் கிடைத்தபோதும் சில நேரங்களில் குறை சொல்ல ஆரம்பித்து விடுவோம். ஆதலால் தினமும் நாம் நன்றி கூறும் 3 விஷயங்களை எழுதி வைப்பது நம்மை நல்ல மனிதராக மாற்றும்.

6. ஆரோக்கியமான உணவு: வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிடுவதை விட ஆற்றல் தரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க உடல் ஆரோக்கியம் பெறும்.

7. பிரதிபலிப்பு: நமக்குள் இருக்கும் பலத்தை உயர்த்திக்கொள்ள விரும்பும் விஷயங்கள் என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். தினமும் உறங்க செல்வதற்கு முன்பு, அந்த நாளில் தம்மை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தோமா என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நம்மை உயர்ந்த மனிதராக மாற்றும் விஷயங்களில் ஒன்றாகும்.

மேற்கண்ட 7 பழக்க வழக்கங்களை நாம் கையாளுவதன் மூலம் வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முடியும் என்பதில் ஐயமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com