
1. கேஸ் சிலிண்டர் டராலி (Gas Cylinder Trolley)
கேஸ் சிலிண்டரை வீட்டு வாசலில் இருந்து, வீட்டின் சமையல் வேலை வரை தூக்கி செல்வது சுலபமாக இருக்காது .ஒவ்வொரு முறையும் இதை தூக்குவதற்கு அதிக வலு தேவைப்படுகிறது. அதற்கு பதில் இந்த டிராலியை வாங்கினால் இதில் சிலிண்டரை வைத்து இலகுவாக சமையலறை வரை அல்லது வேண்டிய இடத்திற்கு சுலபமாக தள்ளிக் கொண்டு செல்ல முடியும். அதே போல் காலி சிலிண்டரையும் இந்த ட்ராலியில் வைத்து வீட்டு வாசல் வரை தள்ளி வர முடியும். பாரத்தை குறைக்கும் இந்த ட்ராலியின் விலை வெறும் 99 ரூபாய் தான்.
2. டாய்லட் கிளினிங் பிரஷ் &வைப்பர் (Toilet Cleaning Brush & Wiper)
இந்த டாய்லட் கிளினிங் பிரஷ் &வைப்பரின் சிறப்பம்சம் என்னவென்றால் இதை டாய்லெட் டைல்சை சுத்தம் செய்யும் பிரஷ்ஷாகவும் , தண்ணீரை வெளியேற்றும் வைப்பராகவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதில் V வடிவத்தில் பிரஷ் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் வைப்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 120 டிகிரி சுற்றும் நீண்ட கைப்பிடியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 175 ரூபாய் தான்.
3. பேன் கிளினிங் மைக்ரோபைபர் மாப் (Fan Cleaning Microfiber Mob)
பேன் பிளேடுகளை சுத்தம் செய்வதற்கு நாம் அதிகம் மெனக்கட வேண்டும். யாராவது ஒருவர் உயரமான ஸ்டூலில் ஏறி தான் அதை சுத்தம் செய்ய வேண்டும். தவறி விழுந்தால் அடியும் கடுமையாக இருக்கும். இந்த பேன் கிளினிங் மாப் மூலம் தரையில் நின்றவாரே மேலே இருக்கும் விசிறியினை எளிமையாக சுத்தம் செய்ய முடியும். மேலும் இதை வைத்து ஒட்டடையும் அடிக்க முடியும். இதன் விலை 179 ரூபாய் தான்.
4.சிலிக்கான் டிஷ் வாஷிங் கிளவுஸ் (Silicon Dish washing Cloves)
சமையல் செய்யும் சாமான்களை கழுவுவதற்கு இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இந்த கையுறைகளை இரண்டு கைகளை மாட்டிக் கொண்டால் எந்த பொருட்களையும் எளிதாக விரைவாகவும் கழுவி விடலாம். சிலிகானில் செய்யப்பட்ட இந்த கையுறை ஆன்லைனில் 289 ரூபாய்க்கு கிடைக்கிறது.
5. மடக்கும் சிறிய மேஜை ( Foldable Mini Table)
சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் படிப்பதற்காகவும் , எழுதுவதற்காகவும், லேப்டாப் உபயோகப்படுத்தவும் இந்த சிறிய மேஜை உபயோகமாக இருக்கும். தரையில் அமர்ந்த வாரே உபயோகப்படுத்த இது சரியான தேர்வாக இருக்கும். இதை தேவைப்படாத நேரத்தில் மடக்கி ஓரமாக வைக்கலாம் , இடத்தை அடைக்காது. பல உபயோகங்கள் கொண்ட இதன் விலை வெறும் 200 ரூபாய் தான்.
6. கத்தியை தீட்டும் ஷார்ப்பனர் (Solitude Knife Sharpener)
நம் சமையல் அறையில் உள்ள கத்திகள் அடிக்கடி கூர்மை மழுங்கி வெட்டுவதற்கு தயாராக இல்லாமல் போய்விடும். இதனால் அடிக்கடி புதிய கத்தி வாங்க வேண்டி இருக்கும். அதற்கு பதில் இந்த கத்தியை தீட்டும் பொருளை வாங்கினால், புதிதாக கத்தி ஒன்றை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் உள்ள ஷார்பனரில் கத்தியை சிலமுறை வைத்து இழுத்தால் கத்தி கூர்மையாகிவிடும். காய்கறி அல்லது பழங்களை வெட்டுவதும் எளிதாக இருக்கும். இதன் விலை 199 ரூபாய் தான்.
7. சமையலறை தராசு (Kitchen Weighing Scale)
தினசரி சமையலுக்கு நாம் உபயோகப்படுத்த வேண்டிய பொருட்களின் எடையை சரி பார்ப்பதற்கு இந்த சிறிய டிஜிட்டல் தராசு உபயோகமாக இருக்கும். சரியான அளவில் சமையல் பொருட்களை கலந்து சுவையாக தயாரிக்க இதன் உதவி உங்களுக்கு தேவைப்படும். சந்தையில் நீங்கள் வாங்கும் பொருட்கள் சரியான எடையில் உள்ளதா? என்பதையும் நீங்கள் இதன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் விலை வெறும் 179 ரூபாய் தான்.